நாங்கள் குடும்ப அரசியல் செய்வோம் – எம்.நடராஜன் அதிரடி பேச்சு

நாங்கள் குடும்ப அரசியல் செய்வோம் அதை மறுக்கவில்லை என்று தஞ்சையில் அதிரடியாக எம்.நடராஜன் பேசியுள்ளார்.

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சசிகலா பொதுச்செயலாளராக பொறுப்பேற்றார். ஆனாலும் அவரது சொந்தங்கள் கட்சியில் ஆதிக்கம் செலுத்துவதற்கு தொண்டர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

கட்சியில் ஜெயலலிதாவை தவிர யாரையும் முன்னிலை படுத்த மாட்டோம், யாரும் கிடையாது என்று பொதுச்செயலாளராக பதவி ஏற்றபோது சசிகலா பேசினார். ஆனால் சில நாட்களிலேயே அது கலைந்தது.

நேற்று தஞ்சையில் நடந்த இலக்கிய விழாவில் பேசிய திவாகரன் தன்னாலும் , நட்ராஜனாலும் தான் அதிமுக காப்பாற்றப்பட்டது என்று தெரிவித்தார். இது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது.

மீண்டும் குடும்ப ஆதிக்கம் வருகிறது , திவாகரன் இப்படி பேச அவர் யார் என்று கே.பி முனுசாமி பேட்டி அளித்தார். அதற்கு முனுசாமி துரோகி என்று மூன்று அமைச்சர்கள் பேட்டி அளித்தனர்.

இந்நிலையில் மீண்டும் ஒரு அணு குண்டை தூக்கி எம்.நடராஜன் போட்டுள்ளார்.
இன்று தஞ்சையில் நடந்த கலை இலக்கிய விழாவில் பேசிய எம்.நடராஜன் பாஜக பற்றி அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை பாஜக மீது சுமத்தியவர் நாங்கள் குடும்ப அரசியல் செய்வோம் மாட்டேன் என்று சொல்லவில்லை என்று பேசியுள்ளார்.

அரசியலில் சரவெடி பேச்சு என்பார்கள் இன்றுள்ள சூழ்நிலையில் இது அணுகுண்டை வீசும் பேச்சு ஆகும். தீபா போன்றோருக்கு ஆதரவு பெருகி வரும் நிலையில் , ரஜினி போன்றோர் விமர்சித்துள்ள நிலையில் இது அரசியலில் வேறு ஒரு விவாதத்துக்கு இட்டுசெல்லும் சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது.
newsfast

Leave a Reply