”நலம் தானா நலம் தானா” பாட்டு பாடும் முதல்வர் , கொந்தளிக்கும் இளைஞர்கள்

தமிழக அரசின் இலக்கிய விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் இன்று காலை நடைபெற்றது. இதில் தமிழக முதல்வர் பன்னீர் செல்வம் கலந்து கொண்டார். அப்பொழுது சினிமாவில் பாட்டு எழுதும் கவிஞர்களை பாராட்டி பேசிய முதல்வர் நலம் தானா நலம் தானா என்ற பாடலை மேடையில் பாடினார்.

ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக போராடும் இளைஞர்களிடையே இது மேலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒருத்தரு ஆட்சிய கலைக்கனும் என்கின்றார், தட்டிக் கேட்க வேண்டிய முதல்வர் பாட்டு பாடிக் கொண்டிருக்கின்றார், ஓட்டு போட்ட மக்கள் வீதியில் இறங்கி போராடி போலிசிடம் அடிவாங்கிக் கொண்டிருக்கின்றார்கள் நல்லா விளங்கிடும் என ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இங்கே இளைஞர்கள் வீதியில் இறங்கி போராடிக் கொண்டிருக்கின்றோம், அதற்கு ஆவண செய்யாமல் சினிமாவில் பாட்டு எழுதியவர்களுக்கு விருது வழங்கும் விழா நடத்துவது தான் அரசிற்கு முக்கியமா என அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

சினிமா காரர்களை அரசே இது போன்று ஊக்கு விப்பததால் தான் வரிந்து கட்டிக் கொண்டு நடிகை நடிகைகள் கருத்துக் சொல்லிக் கொண்டு திரிகின்றார்கள் என அவர்கள் கொந்தளிக்கின்றனர்.

sattrumun

Leave a Reply