தமது அரசியல் பயணத்தை யாராலும் தடுக்க முடியாது : தொண்டர்கள் மத்தியில் தீபா பேச்சு

தமது அரசியல் பயணத்தை யாராலும் தடுக்க முடியாது : தொண்டர்கள் மத்தியில் தீபா பேச்சு
சென்னை : சென்னை தி. நகரில் உள்ள ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா வீட்டு முன்பு ஆயிரத்திற்கு மேற்பட்ட அ.தி.மு.க.வினர் திரண்டுள்ளனர். சென்னை, காஞ்சிபுரம்,திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து ஆயிரக்கணக்கான தொண்டர்கள் தீபாவுக்கு ஆதரவு தெரிவித்து வந்துள்ளனர். அதிமுகவின் தலைமைப் பொறுப்பை ஏற்கக்கோரி தீபாவை வலியுறுத்தி அதிமுகவினர் முழக்கமிட்டனர்.  
இடைத்தேர்தலில் தீபா போட்டியிட வேண்டும் என அதிமுக தொண்டர்கள் வலியுறுத்தியுள்ளனர். தை பிறந்தால் வழி பிறக்கும் என்று தீபா கூறியிருந்தார் அதனால் வந்திருக்கிறோம் என்று தொண்டர்கள் முழங்கினார். மேலும் இடைத்தேர்தலில் தீபா போட்டியிட வேண்டும் என அதிமுக தொண்டர்கள் வலியுறுத்தியுள்ளார். 
தொண்டர்கள் மத்தியில் தீபா பேச்சு :
தமது அரசியல் பயணத்தை யாராலும் தடுக்க முடியாது என ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா தொண்டர்களிடம் தெரிவித்தார். விரைவில் நல்ல முடிவை அறிவிப்பேன் என்று தெரிவித்தார். மேலும் தமது வீட்டு முன் குடியிருந்த அதிமுக தொண்டர்கள் முன் இரட்டை விரலைக் காட்டி ஜெ. தீபா தொண்டர்களை உற்சாகப்படுத்தினார்.
சசிகலாவுக்கு அதிமுகவினர் எதிர்ப்பு :
சசிகலாவை கட்சி பொதுச்செயலாளராக ஏற்க முடியாது என அதிமுக தொண்டர்கள் கருத்து தெரிவித்துளள்னர். ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா கட்சிப் பொறுப்பை ஏற்றால் மகிழ்ச்சி அடைவோம் என தெரிவித்தனர்.
மேலும் மருத்துவமனையில் நடந்தது என்ன என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என்று தொண்டர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கட்சி நிர்வாகிகளின் ஆதரவுதான் சசிகலாவுக்கு இருக்கிறது; தொண்டர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று தெரிவித்துள்ளனர். 
தினகரன்

Leave a Reply