ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் உள்ளது பிரதமர்-தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் நோட்டீஸ்

​சென்னை, சென்னை அரும்பாக் கத்தை சேர்ந்தவர் பி.ஏ.ஜோசப். அ.தி.மு.க. தொண்டரான இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:-
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா மர்மமான முறை யில் மரணமடைந்தது குறித்து, பல்வேறு சந்தேகங் கள் மக்கள் மத்தியில் நிலவுவதால் இந்த வழக்கை தொடர்ந்துள்ளேன்.

சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. மீண்டும் வெற்றி பெற்று, ஜெயலலிதா ஆட் சிக்கு வந்த 4 மாதங்களில், உடல் நலம் பாதிக்கப்பட்டு, அவர் மரணம் அடைந் துள்ளது மிகப் பெரிய சந்தே கத்தை ஏற்படுத்தியுள் ளது. நல்ல உடல் ஆரோக்கியத் துடன் இருந்த ஜெயலலிதா, திடீரென இரவோடு இர வாக, செப்டம்பர் 22-ந் தேதி ஆஸ்பத்திரியில் அனுமதிக் கப்பட்டார்.

அப்போது அவருக்கு காய்ச்சல், 2 நாட்களில் வீடு திரும்பி விடுவார் என்று செய்திகள் வெளியாகின.

அதன்பின்னர் செப்டம்பர் 24-ந் தேதி சிகிச்சைக்காக ஜெயலலிதாவை வெளிநாட் டிற்கு அழைத்து செல்லப் போவதாக தகவல்கள் வெளி யாகின. ஆனால், அப்பல்லோ ஆஸ்பத்திரி நிர்வாகமோ, ஜெயலலிதா  விரைவில் வீடு திரும்புவார் என்று அறிக்கை வெளியிட்டது. இதற்கிடையில் ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து வெளியாகும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக் கும் விதமாக தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி கோரிக்கை விடுத்தார். ஆனால், இப்படி கோரிக்கை விட அவருக்கு உரிமை இல்லை என்று அ.தி.மு.க. நிர்வாகி பண்ருட்டி ராமச்சந்திரன் பதிலளித்தார். அதேபோல, ஜெயலலிதா சிகிச்சை பெறும் புகைப் படத்தை வெளியிட அவசிய மில்லை என்று அ.தி.மு.க. தரப்பிலும் விளக்கம் அளிக்கப்பட்டது.
ஜெயலலிதாவுக்கு வெளிநாட்டு டாக்டர்கள், டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரி டாக்டர்கள் ஆகியோர் சிகிச்சை அளித்தனர். இதனால் ஜெயலலிதா குணமடைந்து வீடு திரும்புவார் என்று அ.தி.மு.க. தொண்டர்கள் எல்லோரும் ஆர்வத்துடன் இருக்கும் போது, கடந்த 5-ந் தேதி திடீரென ஜெயலலிதா இறந்து விட்டதாக அப்பல்லோ ஆஸ்பத்திரி நிர்வாகம் அறிவித்தது.

இதில் பெரும் சந்தேகம் உள்ளது. இறப்பு அறிவிப்பு வெளியாவதற்கு சில மணி நேரத்தில் அவசர அவசரமாக முதல்-அமைச்சர் பதவியை ஓ.பன்னீர்செல்வம் ஏற்றார். இது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

கடந்த மே மாதம் நடந்த தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி  பெற்று, ஜெயலலிதா பதவி ஏற்றார். அப்போது ஆரோக்கியமாக அவர் இருந்தார். பதவி ஏற்று 4 மாதங்களில் அவர் திடீரென மர்மமான முறையில் உடல் நலம் பாதிக்கப்பட்டு, பல நாட்கள் சிகிச்சைக்கு பின் அவர் இறந்ததாக அறிவிக் கப்பட்டுள்ளது. அதிலும், ஜெயலலிதாவின் இரு கால்களையும் அகற்றி விட்டதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. மேலும், ஜெயலலிதாவின் உடலை பதப்படுத்தியுள்ளனர். எதற் காக அவரது உடல் பதப் படுத்தப்பட்டது என்பதற்கு எந்த விளக்கமும் இல்லை.
எனவே, ஜெயலலிதாவின் மரணத்தில் பெரும் சந்தேகம் உள்ளது. நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சாவில் சந்தேகம் இருப்பதாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த கொல்கத்தா ஐகோர்ட்டு, நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைத்து உத்தரவிட்டது.

 

அதுபோல, மிகப் பெரிய தலைவரான ஜெயலலிதாவின் சாவிலும் மர்மம் உள்ளது. இதுகுறித்து, விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு ஓய்வு பெற்ற நீதிபதிகள் 3 பேர் தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும். இந்த விசாரணை முடியும் வரை, மெரினா கடற்கரையில் புதைக்கப்பட்டுள்ள ஜெய லலிதாவின் உடலை பாது காக்க ஒரு குழுவை அமைக்க வேண்டும்.

அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை விவர ஆவணங்களை இந்த ஐகோர்ட்டு அப்பல்லோ ஆஸ்பத்திரி நிர் வாகத்திடம் இருந்து பெற்று, பாதுகாக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப் பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், வி.பார்த்திபன் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் முத்துகுமாரசாமி, மத்திய அரசு சார்பில் மதன கோபால்ராவ்,  மனுதாரர் சார்பில் மூத்த வக்கீல் கே.எம்.விஜயன் ஆகியோர் ஆஜரானார்கள்.
Dailydhanthi

Leave a Reply