ஜீ எஸ் டி

​வீட்டுக்கு தண்ணீர் கேன் சப்ளை செய்பவர். நாளை முதல் ஒரு கேனுக்கு 5 ரூபாய் அதிகம் இனிமேல் ஒரு கேன் 40 ரூபாய் என்றார். அவர் சமாதானமாகவோ என்னவோ “எல்லாம் இந்த மோடி பண்றது’’ என்றார். இந்த மனிதர் சுமார் பத்து வருடங்களாக இந்தத் தொழில் செய்துவருகிறார். ஒருமுறைகூட தண்ணீருக்கு விற்பனை ரசீது தந்ததில்லை. இந்த தொழிலுக்கு முறையான பதிவு இப்போதுவரை இல்லை. ஒருவேளை இருந்தாலும் விற்கும் எல்லா கேனுக்கும் வரி கட்ட மாட்டார்கள். ஒரு பத்து சதவீத கேனுக்குத்தான் வரி கட்டுவார்கள். அப்புறம் ஏன் எல்லோருக்கும் விலை ஏற்றுகிறார்கள்?. ஜி.எஸ்.டியின் பெயர் சொல்லி  பொருட்களின் விலையை ஏற்றி இருக்கும் வணிகர்களில் பெரும்பகுதி இப்படிப்பட்டவர்கள்தான். இந்த நல்லபிள்ளைகள்தான் அறச்சீற்றம் கொண்டு அரசுகளை சாடிக்கொண்டிருக்கிறார்கள். ஊழல் ஒழிய வேண்டும் என்கிறார்கள்.
GST யை பற்றி சமூக வலைத்தளங்களில் மிகப்பெரிய அளவில் பரப்புரை செய்யப்பட்டதும் மற்றும் சாமானியனின் மனதில் எழுந்த சில வினாக்களுக்கும்சில விளக்கங்கள் கீழ்கண்டவாறு!.
1. GST யால் டீ விலை ரூ.8 லிருந்து ரூ.10 ஆகவும் காபி ரூ.10 லிருந்து ரூ.12 ஆகவும் விலையேற்றப்பட்டுள்ளதே?
பால் – வரி விலக்கு

சர்க்கரை –  5% வரி. முன் 6%.

டீ, காபி தூள் – 5% வரி. முன் 6%.
ஆகையால் டீ, காபி விலையேற்றம் விற்பனையாளர்களின் தன்னிச்சையான முடிவு.
2. தங்க பிஸ்கட்டுக்கு 3% நம்ம பிஸ்கட்டுக்கு 18%?
GST யில் பிஸ்கட் 32 சதவீதத்திலுருந்து 18% ஆக குறைந்துள்ளது. இதை மறைத்துவிட்டு தங்கத்தோடு ஒப்பிடுவது முறையாகாது.
3. கடலை மிட்டாய்க்கு 18% , பீட்சாவுக்கு 5% இது என்ன நியாயம்?
கடலை மிட்டாய் குடிசை தொழிலாகவும், சிறு குறு நிறுவனங்களால் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது. GST பொறுத்த வகையில் 20 லட்சம் வரை turnover செய்பவர்கள் வரிகட்ட தேவையில்லை. அதற்கும் மேல் அதாவது 20-70 லட்சம் வரை turnover செய்பவர்கள் 2% வரி கட்டினால் போதும். ஆக பெரும்பான்மையான அனைத்து சிறு குறு தொழில்களும் 20 லட்சத்திற்கு உள்ளே தான் இருக்கும், ஆக இவர்கள் GST வரி செலுத்த தேவையில்லை. ஒரு வேலை அவர்களின் turnover 20-70 இலட்சம் இல்லாது அதன் மேல் இருந்தால் அவர்கள் 2% வரி செலுத்தினால் மட்டும் போதுமானது.
4. பெண்கள் பயன்படுத்தும் நாப்கின்களுக்கு

18% வரி போடுவதா?
பெரும்பாலும் சுய உதவி குழுக்கள்தான் இந்த உற்பத்தியில் ஈடுபட்டுள்ளனர். அதோடு மட்டுமில்லாமல் சிறு குறு தொழிலாகவும் செய்யப்படுகிறது. ஆக நான் மேற்க்குறிப்பிட்டதுபோல் 20 இலட்சம் வரை இதற்கு வரிவிலக்கு. 20-70 இலட்சம் வரை turnover இருந்தால் 2% வரி. ஒரு வேலை இதற்கு வரிவிலக்கு அளித்தால் இதை ப்ராண்டாக(brand) விற்பனை செய்யும் பெரு நிறுவனங்களிடம்(MNC) போட்டிபோட முடியாமல் இந்த சிறு குறு உற்பத்தியாளர்கள் பாதிக்கப்படுவர்.
5. ஹோட்டல்களில் அதிக வரி வசூலிக்கப்படுகிறதே? 
GST க்கு முன்னால் உணவகங்களில் 14.5% VAT, 5.6% service tax, swach bharath, krish kalyan tax என 20.5% வரை வரி செலுத்தினோம். அனால் தற்போது 18% ஆக குறைக்கப்பட்டுள்ளது.
6. 28% வரி போடுவதா? 
GST யில் 81 சதவீத பொருட்கள் 18% வரிக்குள் வந்துவிடும். அத்தியாவசியத்தை தாண்டி சொகுசு என்ற வரையறையின் எல்லையை நெருங்கும் போதுதான்  28% வரி வசூலிக்கப்படும். அதாவது நட்சித்திர விடுதியில் தங்க ஒரு நாளைக்கு ரூ.7500 மேல் முன்பதிவு செய்வது, make up items, வாசனை திரவியம், face creams, fridge போன்ற பொருட்கள் இந்த வரிக்குள் அடங்கும்.
7. எதை வரி இல்லாம கொடுப்பாங்க?
அத்தியாவசிய பொருட்களான அரிசி, கோதுமை, தானியங்கள், பழங்கள்,காய்கறிகள், பால் போன்றவைகளுக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
எனவே தொழில்தொடங்க ஏதுவாக இருக்கும் நாடுகளில் 130 வது இடத்திற்கு மேல் இருக்கும் நம் இந்தியா இது போன்ற வரி சீர்திருத்தம் செய்வது மிகவும் அவசியமானது…..படித்ததில் பிடித்தது.

Leave a Reply