சேகர் ரெட்டி இருப்பது புழலா அல்லது வீட்டுச்சிறையா..? கொதிக்கும் சிறைக்கைதிகள்..!!

தமிழகத்து மணலை சுரண்டி பல்லாயிரம் கோடி பணம் சேர்த்த சேகர் ரெட்டி வீட்டில் இருப்பது போலவே அத்தனை சுகத்தையும் ஜாலியாக அனுபவித்து வருவதாக புழல் சிறையில் இருக்கும் மற்ற சிறை கைதிகளே கொந்தளித்து இருப்பதாக தெரிய வந்துள்ளது.

வேலூர் சேகர் ரெட்டி மற்றும் அவரது தொழில் கூட்டாளிகள் வீடுகளில் அதிரடி ரெய்டு நடத்திய வருமான வரித்துறையினர் கோடிக்கணக்கில் பணம் தங்கக்கட்டிகளை பறிமுதல் செய்தனர்.

அவருடன் தொடர்புடைய தலைமை செயலாளர் ராமமோகன ராவ் வீடுகளிலும் ரெய்டு நடத்தி அவரிடமும் பல கோடி மதிப்பிலான பணம்,தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சேகர் ரெட்டி அங்குள்ள அதிகாரிகளை நன்றாக ‘கவனித்து’ வருவதால் அவருக்கு தேவையான அனைத்தும் அதிகாரிகள் சிரம் தாழ்த்தி செய்து கொடுக்கிறார்களாம். பழத்துடன் கூடிய வீட்டுச்சாப்பாடு வந்து சேர்கிறது.

ஆட்சி அதிகாரத்தில் இருப்போர் அவ்வப்போது வந்து பார்த்துச்செல்வது, மற்றவர்களுடன் தொடர்பு கொள்ள செல்போன் என வெளியில் இருப்பது போலவே ரொம்ப ஜாலியாக இருக்கிறாராம் சேகர் ரெட்டி.

குற்றவாளிக்கு செய்யும் தொண்டுகளை, கடமையுணர்வு உள்ள சிறை அதிகாரிகள் கவனித்துக்கொள்ளும் போது அவருக்கு என்ன குறை வந்துவிடப்போகிறது?

சிறை குற்றவாளிக்கு பாடம் புகட்டும் கூடமாக இருக்க வேண்டும். பின்னர் குற்றம் எங்கிருந்து குறையும்? வசதியற்ற, வாழ்வாதாரத்திற்காக குற்றம் செய்து சிறைக்கு வருபவனை, சிறைத்துறை வாட்டி வதைப்பது, வசதியானவனுக்கு வாரி தொண்டு செய்வது.. இது தானா சிறை நிர்வாகத்தின் நியாயம்..கடமைகள்..??

இது சிறையில் தண்டனை பெற்று வரும் சாதாரண கைதிகளின் கூக்குரல்..??!!

Leave a Reply