சின்னம்மா போட்ட பிச்சையால் தான் ஜெயலலிதா முதல்வரானார்! – சர்ச்சையில் சிக்கிய பா.வளர்மதி!

ஜெயலலிதா உயிரோடு இருந்தவரை அவரின் புகழ்பாடி வந்த அதிமுகவின் முன்னணி நிர்வாகிகள் தற்போது ’சின்னம்மா’ சசிகலா புராணம் பாடி வருகின்றனர்.

 

ஜெயலலிதா இருக்கும் போது சசிகலாவை பற்றி வாயே திறக்காத பலர் இன்று அவர் செய்த தியாகங்கள் என பல விடயங்களை பட்டியலிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்று முடிந்த அதிமுக பொதுகுழுவில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி, 1996ம் ஆண்டு தொடரப்பட்ட சொத்துக்குவிப்பு வழக்கில் சின்னம்மா அப்ரூவர் ஆகியிருந்தால், அம்மாவும் இருந்திருக்க மாட்டார் அதிமுகவும் இருந்திருக்காது.

சின்னம்மா போட்ட பிச்சை தான் ஜெயலலிதா முதல்வராக இருந்தது. சின்னம்மா நினைத்திருந்தால் ஜெயலலிதாவும் எப்போதோ காணாமல் போய் இருப்பார் என அவர் பேச அங்கிருந்த அதிமுகவினர் பேச்சு மூச்சில்லாமல் சில நிமிடம் ஆடி போனார்கள் என கூறப்படுகிறது.

இதை கேள்விப்பட்ட அடிமட்ட அதிமுக தொண்டர்கள் ஜெயலலிதா இருந்தவரை வாய் திறக்காத இந்த கூட்டம் இன்று போடும் ஆட்டம் தாங்கவில்லை என குமுறுகின்றனர்.

Leave a Reply