சசியின் கட்சி பதவி ஆசையில் மண்! எம்.ஜி.ஆர் தீட்டிய சட்ட விதி

சசியின் கட்சி பதவி ஆசையில் மண்! எம்.ஜி.ஆர் தீட்டிய சட்ட விதி, ஜெ..எடுத்த நடவடிக்கை..!

சசிகலாவை பொதுச்செயலாளராக்க முயற்சி செய்யும் ஜால்ராக்களின் ஆசையில், அ.தி.மு.க.வின் சட்டவிதி லாரி,லாரியாக மண்ணை அள்ளி கொட்டியுள்ளது.

தி.மு.க.வில் இருந்து வெளியேற்றப்பட்ட எம்.ஜி.ஆர் 17 அக்டோபர் 1972 ஆம் ஆண்டு அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை துவங்கினார். அதற்கான சட்ட விதிகளும் வரையறுக்கப்பட்டது.

பின்னாளில் அவற்றில் படிப்படியாக சில திருத்தங்கள் செய்யப்பட்டது.

அப்படி வரையறுக்கப்பட்ட சட்டவிதிகளில் 05.02.2007, 30, (5)-ன் படி கட்சியின் நிர்வாகிககளுக்கான பதவிக்கு போட்டியிடுபவர்கள்  தொடர்ந்து ஐந்தாண்டுகள் கட்சி உறுப்பினர்களாக  இருந்திருக்க வேண்டும். இடையில் எந்த பிரேக்கும் இருந்திருக்கக்கூடாது. (Those who want to contest for the post of office bearers in the Organization should have been members of the party for 5 years without any break. The General Secretary is vested with the power to relax this)

இதற்கு விலக்கு அளிக்கும் அதிகாரம் கட்சியின் பொதுச் செயலாளருக்கு மட்டுமே உண்டு.

அ.தி.மு.க.வின் இந்த சட்ட விதி சசிகலாவுக்கு பெரிய ஆப்பு வைத்திருக்கிறது.

ஏனெனில் 2011 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 18 ஆம் தேதி  சசிகலா வகித்த நிர்வாக குழு  உறுப்பினர் பதவிகள் பறிக்கப்பட்டு,அவரையும், அவரைச் சார்ந்த 11 பேரையும் கட்சியில் இருந்து நீக்கினார் பொதுச்செயலாளர் ஜெயலலிதா.

மூன்று மாதங்கள் கழற்றிவிடப்பட்ட சசி பின்னர் மன்னிப்பு கோரியதன் பேரில் போயஸிலும், கட்சியிலும் ரீ எண்ட்ரி கொடுத்தார்.

இந்த நிகழ்வு நடந்து இன்னும் ஐந்து ஆண்டுகள் நிறைவடையவில்லை. (பிரேக் ஆகிவிட்டது) இங்குதான்  எம்.ஜி.ஆர். வகுத்த அ.தி.மு.க.வின் சட்ட விதி 30, (5) -ன் அதன் கடமையை செய்கிறது.

அந்த விதிப்படி பார்த்தால் சசிகலா அ.தி.மு.க.வில் ரீ எண்ட்ரி ஆகி இன்னும் ஐந்தாண்டு நிறைவடையவில்லை. அதற்கு மூன்றரை மாதங்கள் பாக்கி  உள்ளன.

அந்த பருவம் வரும்வரை, சசிகலா கட்சியில் எந்த பதவியையும் லீகலாக பெறடியாது.

இந்த சட்டதிட்டத்தில் பொதுச்செயலாளருக்கு சில அதிகாரங்கள் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அந்த பதவியில் இருந்தவர் தான் மறைந்துவிட்டாரே என்று யதார்த்தமாக கேட்கத்தோன்றுகிறது.

இருக்கட்டும். மாபெரும் இயக்கத்தை உருவாக்கிய எம்.ஜி.ஆர். இது என்றைக்குமே தொண்டர்கள் நிறைந்த கட்சியாக நடத்திவந்தார்.

தொண்டனின் விருப்பத்துக்கு மாறாக கட்சியில் விரும்பத்தகாத நிகழ்வுகள் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காகத்தான் கட்சிக்கு கடுமையான சட்ட திட்டங்களை வகுத்துவிட்டு சென்றிருக்கிறார்.

அந்த சட்டங்களை எம்.ஜி.ஆர்-க்கு பின் வந்த ஜெ… சின்சியராக பின்பற்றினார். ஆனால், இன்று அவற்றை வகுத்தவரும் இல்லை, கட்டிகாத்தவரும் இல்லை. கட்சி சூறைக்கு  தயாராகி வருகிறது.

தொண்டர்களின் நலனுக்காக எம்.ஜி.ஆர். வகுத்த கட்சியின் சட்டதிட்டங்கள் தற்போது கலங்கிடும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது.

ஆம், அம்மாவின் கைநாட்டை பயன்படுத்தி பதவியை பிடிக்க உல்டா சுல்டா வேலை நடந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

அ.தி.மு.க.வை பொறுத்தவரை தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சி என்பதால், நடக்கும் விஷயங்களை தேர்தல் ஆணையம் கூர்ந்து கவனித்துக்கொண்டிருக்கிறது.

அ.தி.மு.க.சட்டவிதிகளை சசிகலா மீற முயன்றால் அ.தி.மு.க. மாலுமியில்லாமல் “வார்தா” புயலில் சிக்கிய கப்பல் கதையாகிவிடும்.

Leave a Reply