சசிகலா தலைமையில் பணியாற்ற அ.தி.மு.க., பொதுக்குழுவில் தீர்மானம்

சென்னை: சசிகலா தலைமையில் விசுவாசத்துடன் பணியாற்ற உறுதியேற்பது என்று அதிமுக., பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பரபரப்பான சூழலில் அ.தி.மு.க., அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் செயற்குழு, பொதுக்குழு இன்று (டிச. 29 ம் தேதி) கூடியது . சென்னை வானகரத்தில் உள்ள வெங்கடாஜலபதி மண்டபத்தில் காலை 9. 30 மணியளவில் துங்கியது. இந்த பொதுக்கூட்டத்தில் சசிகலாவின் எதிர்ப்பாளர்கள் யாருக்கும் அழைப்பிதழ் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அமைச்சர் எட்பாடி பழனிச்சாமி முன்மொழிய மறைந்த ஜெயலலிதா மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், இரங்கல் தீர்மானத்தை வாசித்தார். இந்த தீர்மானம் படிக்கும் போது ஓ.பி.எஸ்., கண்ணீர் விட்டார். மற்றொரு தீர்மானத்தில் சசிகலா தலைமையில் விசுவாசத்துடன் பணியாற்ற உறுதியேற்பது என்றும் , தீர்மானம் நிறைவேற்றப்பட்டன. மொத்தம் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

-Dinamalar

Leave a Reply