என் பொண்டாட்டிக்கு தான் கட்சி, என் பொண்டாட்டி தான் முதல்வர், சித்தப்பூ சபதம்

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா சிறைக்கு செல்ல நேரிட்டால், கட்சியையும், ஆட்சியையும் எப்படி வழிநடத்துவது. என்று 2011ம் ஆண்டே சசிகலா குடும்பத்துடன் ஆலோசனை நடத்தியதாக சொல்லப்பட்டு கடந்த 2011-ம் ஆண்டு சசிகலா, அவரது கணவர் நடராஜன் உள்ளிட்ட 13 பேரை கட்சியில் இருந்து நீக்கப்பட்டனா். வேலைக்காக வந்தா்வா்கள் துரோகம் செய்ய திட்டமிடுவதா? என்று கூறி அனைவரையும் கார்டனை விட்டு வெளியேற்றினார் ஜெயலலிதா.

சசிகலா எனக்கும் அந்த ஆலோசனைக்கும் சம்பந்தம் இல்லை அக்காவால் நான் அக்காவுக்காக நான் என்று மன்னிப்பு கடிதம் கொடுத்து மீண்டும் கார்டனுக்குள் நுழைந்தார். நடராஜன் மற்றும் அவரது குடும்பத்தினா் உடன் உறவு பாராட்டாமல்தான் சசிகலாவும் இருந்து வந்தார். நடராஜன், தம்பி திவாகரன், அண்ணன் மகன் டாக்டர் வெங்கடேஷ், ராவணன் உள்ளிட்ட சசியின் உறவினா்கள் அனைவரையும் வழக்கு போட்ட சிறையில் தள்ளி பழி தீா்த்துக் கொண்டார் முதல்வா் ஜெயலலிதா.

என்னதான் இருந்தாலும் தாலி கட்டிய கணவன்தானே. மற்றவா்கள் அனைவரும் ரத்த சொந்தங்கள். மனதளவில் சிரமப்பட்டாலும் சசி அதனை வெளியில் காட்டியதில்லையாம். இவ்வாறாக இருந்த நேரத்தில் நடாஜனின் சமையலா் மூலமாக சசிகலா தொடா்பு கொண்டு பேசிவந்தாராம். இந்த தொடா்பு சசிகலா சிறையில் இருந்தபோதும் தொடா்ந்தது என்கிறார்கள். ஜெயலலிதா இறந்துவிட்டார் என்கிற முதல் தகவலும் தனது கணவருக்குதான் சொன்னாராம். அவா் சொன்னபடிதான் எம்.எல்.ஏக்கள், எம்பிக்கள், மாவட்ட செயலாளா்கள் என அனைவரிடத்தில் கையெழுத்து வாங்கி வைத்துள்ளாராம்.

மற்ற உறவினா்கள் அனைவரும் ஜெயலலிதா இறந்த பின்பு போயஸ் சென்று விட்டனா். ஆனால் நடராஜன் தனது மனைவி அதிமுக பொதுச் செயலாளா், தமிழகத்தின் முதல்வராக வந்த பின்புதான் போயஸ்க்கு வருவாராம் இவ்வாறு சபதமிட்டு இருப்பதாகக்கூட கூறப்படுகிறது. எம்.ஜி.ஆா் மற்றும் ஜெயலலிதாவின் தியாகத்தால் வந்த அதிமுக எப்படி எல்லாம் ஆகிறது பாருங்கள் என்று சீனியா் வட்டாரங்கள் வருத்ததுடன் நடப்பதை பார்த்து வருகின்றனா்.

-seithipunal

Leave a Reply