எதிரியை வென்று துரோகியிடம் தோற்றுவிட்டாய்

2016ல் அதிமுக தோற்றிருந்தால் நிச்சயம் இந்நேரம் அம்மா உயிரோடு இருந்திருப்பார்.
2011ல் அதிமுக ஆட்சியை பிடித்ததும் அவர் உயிருக்கு மன்னார்குடி கும்பலால் ஆபத்து என்ற தகவல் கிடைத்ததும் ஒட்டுமொத்த கும்பலையும் துரோகி எனக்கூறி வீட்டை விட்டும் கட்சியை விட்டும் விரட்டினார். பெரும்பாலான மன்னார்குடி கும்பலை சிறையில் அடைத்தார்.

அதனால் உயிர் தப்பினார். 
அவர் ஒரு மன்னிப்பு கடிதத்தை நம்பி காலனை வீட்டுக்குள் விட்டார்.
சமயம் பார்த்து 2016ல் ஆட்சியை பிடித்த மூன்றாவது மாதத்திலேயே காலன் தன் வேலையை காட்டியது. 
எமனின் வழிகாட்டுதலில் தற்போதுவரை அனைத்தும் பிசிறு தட்டாமல் திட்டமிட்டபடியே நடக்கிறது. முழு மெஜாரிட்டியுடன் முழுமையாக 4.5 ஆண்டுகள் ஆட்சி சுகம் எளிதாக யாருக்கு கிடைக்கும்?
அம்மையப்பனையே உலகமாக நினைத்து சுற்றி வந்து ஞானக்கனியை பரிசாக பெற்ற விநாயகரைப்போல ராஜாஜி ஹாலில் அம்மாவின் உடலை சுற்றி வந்து கட்சி, ஆட்சியை பரிசாக பெற்றிருக்கிறது ஒரு குடும்பம்.
ஒருவேளை 2016ல் அதிமுக தோற்றிருந்தால் 2021ல் ஆட்சியை பிடித்துக்கொடுக்கும்வரை அவர் உயிர் இருந்திருக்கும்.
அரச சிம்மாசனம் ஒரு பேரரசியை மண்ணோடு சாய்த்துவிட்டது :'(
எதிரியை வென்று துரோகியிடம் தோற்றுவிட்டாய்! :'(

Leave a Reply