ஆட்சியை கலைத்து தேர்தல் நடத்துங்கள்! தீர்ப்பு நாங்கள் வழங்குகிறோம்! கொதித்து எழுந்த மக்கள்

தமிழக முதல்வர் ஜெயலலிதா மரணத்தை அடுத்து ஏற்கனவே இரண்டு முறை ஜெ.,வால் அடையாளம் காட்டப்பட்டு முதல்வராக இருந்த,  மூத்த அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக தேர்வு செய்யப்பட்டார்.

எளிமையான முதல்வர் என்று பெயர் எடுத்த பன்னீர்செல்வம், தினம் கோட்டைக்கு சென்று முதல்வர் பணியை சிறப்பாக செய்து வருகிறார். மக்கள் மனதில் நல்ல முதல்வர் என்ற பெயரையும் பெற்று வருகிறார்.

இந்நிலையில், மக்களவை துணை சபாநாயகரும் எம்.பி.,யுமான தம்பிதுரை, தனது எம்.பி.,லட்டர் பேர்டில் ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் ஆட்சியும் அதிகாரமும் ஒரே இடத்தில் இருக்க வேண்டும்.

பன்னீர்செல்வம் ராஜினமா செய்ய வேண்டும் என்றும் சசிகலா முதல்வராக பொறுப்பு ஏற்கவேண்டும் என குறிப்பிட்டார். இவரது அறிக்கை பல்வேறு சர்ச்சையை கிளப்பி வருகிறது.

பன்னீர்செல்வம் முதல்வராக பொறுப்பேற்று ஒரு மாதம் கூட நிறைவு பெறாத நிலையில் இது தேவையா என பலரும் கேள்வி எழுப்புகின்றனர். தமிழகம் முழுவதும் எதிர்ப்பு கிளப்பி வருகிறது.

தமிழக முதல்வர் யார் என தீர்மானிக்க தம்பிதுரை யார்? ஆட்சியை கலைத்து விட்டு தேர்தல் நடத்துங்கள் அடுத்து யார் முதல்வராக வரவேண்டும் என நாங்கள் தீர்ப்பு வழங்குகிறோம் என இளைஞர்கள் வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.

உங்கள் கருத்துகளையும் பதிவு செய்யுங்கள்.

Liveday

Leave a Reply