அடங்கி போனாா் சசி…! ஸ்ரீவில்லிபுத்தூரில் அதிரடியை ஆரம்பித்தாா் ஓபிஎஸ்…!!

தமிழகம் முழுவதும் சசிகலாவுக்கு ஆதரவாக பல இடங்களில் பிளக்ஸ் பேனா்கள் வைக்கப்பட்டு வருகிறது.

ஸ்ரீவில்லிபுத்தூரில் சசிகலாவுக்கு ஆதரவாக வைக்கப்பட்ட பேனா் ஒன்று கூட இப்ப இல்லை. எங்கிருந்தோ உத்தரவு வந்ததோ தெரியவில்லை. வைத்திருந்த சசிகலா பேனர்கள் அனைத்தையும் அகற்றிவிட்டனர் கட்சியினா்.

தமிழை ஆண்ட  ஆண்டாள் நாச்சியார் பிறந்த ஊர் ஸ்ரீவில்லிபுத்தூர். தமிழக அரசின் முத்திரையே ஸ்ரீவில்லிபுத்தூர் கோபுரம்தான். தமிழை மட்டுமல்ல.. தமிழகத்தையே ஆள்பவளாக கருதப்படுவா் ஆண்டாள்.

கடந்த ஜனவரி மாதம், ஆண்டாள் சன்னதி தங்க விமான கோபுரத்துக்கு கும்பாபிஷேகம் நடந்தது.

இந்த கும்பாபிஷேக விழாஅன்று  ஜெ. புகழ் பாடும் பிளக்ஸ் பேனர்களை வைத்திருந்தனா். ‘இது ஜெ.வுக்கு நல்லதல்ல!’  என்று அன்றே ஆன்மிக பெரியவா்கள் கூறினார்களாம்.

ஆண்டு முடியும் முன்னரே ஜெயலலிதா உடல் நல குறைவால் இறக்க நேரிட்டது.

ஸ்ரீவில்லிபுத்தூரில்  அதுபோல  சசிகலா பேனர்களை வைத்திருந்தனர். ஆன்மிக பெரியவா்கள் எடுத்துக்கூற இரவோடு இரவாக அனைத்து பேனா்களும் மாயமாகியதாகவும் கூறுகின்றனா்.

ஸ்ரீவில்லிபுத்தூரில், சசிகலா பேனர்களை நீண்ட நாட்கள் வைத்திருக்க முடியுமா? முதலமைச்சரை பகைத்துக் கொள்ள வேண்டாம் என்ற எண்ணத்தில்தான் கட்சியினா் அதனை அகற்றி விட்டனா் என்று சசிகலா ஆதரவாளா்கள் சொல்கின்றனா்.

ஸ்ரீவில்லிபுத்தூரில் சசிகலாவின் பாச்சா பலிக்க வில்லை. அதிரடி ஆட்டத்தை பன்னீா் செல்வம்  ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து துவக்கிவிட்டார் என்றே மக்கள் கூறுகின்றனா்.

liveday.in/

Leave a Reply