செல்வம் கொழிக்கும் எதிர்காலம் வேண்டுமா? அப்ப இதைப் படிங்க..

இன்றைய காலத்தில் பணம் சம்பாதிக்க எவ்வளவு திட்டமிடுகிறோமோ, அதே அளவு வேகத்தில் அதை எவ்வாறுசெலவு செய்ய வேண்டும் என்பதையும் திட்டமிட வேண்டும். அதன் மூலம் நமது எதிர்கால நிதித் திட்டத்தைத் தெளிவாகவரைந்திர வேண்டியதும் அவசியம்.

இதில் ஓய்வு காலத் திட்டம் மட்டுமல்லாமல், அது பாதுகாப்பான செல்வ வளத்தை நிலைநிறுத்தும் திட்டமாகவும் இருக்கவேண்டும். உங்களுடைய நிதி திட்டமிடுதலை எவ்வளவு சீக்கிரமாக இதைச் செயல்படுத்துகிறோமோ, அந்த அளவுக்குப்பலன்கள் பன்மடங்கு பெருகும்.

சேமிப்பு ஆரம்பக் காலத்தில் நிதித் தேவைகள் குறைவாக இருக்கும், எனவே உங்களால் அதிக அளவு சேமிக்க முடியும்.காலப்போக்கில், உங்களுடைய வருமானமும், கடனும் அதிகரிக்கத் துவங்கும்.

சிறப்பான எதிர்கால நிதி திட்டம் எதிர்கால நிதிதேவைக்குத் திட்டமிடும் போது பல்வேறு வழிகளைப் பற்றி யோசிக்க வேண்டும், நிதித் தேவைகளைப்பொறுத்துக் குறிக்கோள்களை அமைத்திட வேண்டும். இதோ புத்திசாலித்தனமான வகையில் உங்களுடைய நிதி செயல்பாட்டுக்கான எதிர்காலத்தை அமைக்கும் வழிமுறைகள்…

காப்பீடு ஒவ்வொரு தனிநபரும் காப்பீடு திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டும். இதன் மூலம் அவர்களையும், குடும்பத்தையும்அவசர கால நிதி தேவைகளின் போது பாதுகாத்திட முடியும்.

சொத்துக் காப்பீடு வீடு, வாகனம், வியாபாரம் போன்ற பிற சொத்துக்களுக்கும் (ஆபத்து அதிகாமாக இருக்கும் சொத்துக்களுக்கு மட்டும்)காப்பீடு செய்வது நல்லது, ஏனெனில் நட்டம் ஏற்பட்டால் இழப்பீட்டை காப்பீட்டு நிறுவனங்கள் ஈடு செய்யும். எனினும்,இதற்கான விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளைக் கவனமாகப் படிக்கவும்.

நீண்ட காலத் திட்டம் நீண்ட காலத் திட்டமென்றால் நீண்ட காலத்திற்கான முதலீடு என்று பொருளாகும். அது பங்கு வர்த்தகமாகவோ அல்லதுபரஸ்பர முதலீடாகவோ அல்லது வேறு ஏதாவது முதலீடாகவோ இருந்தால், நீண்ட காலத்திற்கு நல்ல பலனுடன்கிடைக்கும். மாறுபட்ட துறைகளில் முதலீட்டை ஈடுபடுத்தும் போது, ஆபத்துகளின் அளவு குறையும். எனினும், ஒவ்வொருவரும்நிதிகள் அல்லது பங்குகளைக் கவனித்து வரவும், தொடர்ந்து பரிசோதித்து வரவும் வேண்டும்.

ஓய்வூதிய தொகை தனியான ஒரு கணக்கைத் துவங்கி, அதில் தொடர்ச்சியாக உங்களுடைய பங்களிப்பை செலுத்தி, தேவைக்கேற்ப பணத்தைஉயர்த்தி வரவும். ஓய்வூதியம் பற்றி நீங்கள் திட்டமிடும் போது, ஓய்வுக்குப் பின்னர் நீங்கள் வாழப் போகும் வாழ்க்கையைக்கணக்கில் கொள்ள வேண்டும். இதை அடிப்படையாக வைத்தே நீங்கள் திட்டமிட வேண்டும்.

கடன் வேண்டாம் செல்வ வளம் பொருந்திய எதிர்காலம் இருக்க வேண்டும் என்றால், தேவையில்லாத கடன்களைத் தவிர்க்க வேண்டும். உங்களுடைய கடன் அட்டைக்கான பில்களைச் சரியான நேரத்தில் செலுத்துதல் மற்றும் EMI-ஐ தவறாமல் செலுத்துதல்போன்ற ஒழுக்கமான பழக்கங்கள் உங்களைக் கடும் கடன் சுமையிலிருந்து காப்பாற்றும்.

அவசரக்கால நிதி உங்களுடைய முதலீடுகளைப் பாதுகாப்பான முறையில் பல தரப்பட்டத் துறைகளில் செய்தாலும், அவசர காலத்தில்தேவைப்படும் நிதியை தயாராக வைத்திருங்கள்.

இழப்பு அவசர கால நிதிய இல்லாமல்ல உங்களுடைய தேவையின் போது வைப்பு நிதியின் வட்டியை இழக்கவோ அல்லது நல்லலாபம் தரக்கூடிய பங்குகளை விற்க வோண்டி நிலை வராது.

முடிவுரை நிதி தொடர்பான விஷயங்கள் பற்றிப் புரிந்து கொள்வதன் மூலமும், உங்களுடைய தேவைகளை அடிப்படையாகக்கொண்டு தேர்வு செய்வதன் மூலமும் பிற்காலத்தில் வருந்த தேவையில்லை.

Leave a Reply