P.V .சிந்து

தெலங்கானா மாநிலம், ஹைராபாத்தில் வசிக்கும் பி.வி.சிந்துவின் குடும்பம் இயற்கையாகவே விளையாட்டு பாரம்பரியத்தை கொண்டது. இவரது

தந்தை பி.வி.ரமணா முன்னாள் சர்வதேச கைப்பந்து வீரர். கைப்பந்து போட்டிக்கு அளித்த பங்களிப்புக்காக அர்ஜூனா விருது பெற்றவர்.

தாயார் பி.விஜயாவும் கைப்பந்து வீராங்கனைதான்.
விஜயா, விஜயவாடாவில் பிறந்தாலும் சில ஆண்டுகள் குடும்பத்தினருடன் சென்னை தியாகராயநகரில் வசித்தார். பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை சென்னையிலேயே விஜயா முடித்தார். தமிழ்நாடு கைப்பந்து அணிக்காக 1977 ஆண்டு முதல் 1983-ம் ஆண்டு வரை தேசிய போட்டிகளில் பங்கேற்று இருக்கிறார்.
இந்த தம்பதிக்கு இரண்டு மகள்கள்.

மூத்த மகள் திவ்யா டாக்டர். கணவருடன் அமெரிக்காவில் குடியேறி விட்டார்.

 2-வது மகள் தான் பி.வி.சிந்து.

சிந்துவின் தாத்தா பிரம்மய்யா தெலுங்குப் பட தயாரிப்பாளர் ஆவார்.

Leave a Reply