கயானா நாட்டுப் பிரதமர் ஒரு “சென்னைத் தமிழர்”!

தென் அமெரிக்காவில் உள்ள கரீபிய நாடான கயானாவின் பிரதமராக தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த மோசஸ் வீராசாமி நாகமுத்து அண்மையில் பதவியேற்றுள்ளார்.

வாழ்க்கைச் சுருக்கம்

மோசஸ் வீராசாமி நாகமுத்து கயானாவின் பெர்பிசு மாவட்டத்தில் விம் என்ற ஊரில் 30.11.1947 அன்று பிறந்தார். ஆசிரியராகவும், பத்திரிகையாளராகவும் பணியாற்றிய இவர் பின்னர் வழக்குரைஞர் ஆனார். கயானா நாட் டின் அரசியல்வாதியும் எழுத்தாளரும் ஆவார்.

1992இல் மக்கள் முன்னேற்றக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர், அமைச்சர்

1964 ஆம் ஆண் டில் அரசியலில் இணைந்து மக்கள் முன்னேற்றக் கட்சி யில் இணைந்தார்.  1992 ஆம் ஆண்டில் அக்கட்சியின் சார் பில் கயானா நாடா ளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், தகவல்துறை அமைச்சராகவும், உள்ளூராட்சி அமைச்ச ராகவும் பணியாற்றினார்.

செட்டி ஜெகன், சாம் அய்ன்ட்சு, ஜனெட் ஜெகன், பாரத் ஜாக்தியோ ஆகிய சனாதிபதி களின் அமைச்சரவைகளில் உறுப்பினராக இருந்தார். 2000 ஆம் ஆண்டில் தனது அமைச்சர் பதவியைத் துறந்தார். 2.8.2008 இல் நடைபெற்ற மக்கள் முன்னேற்றக் கட்சியின் 29ஆவது மாநாட்டில் அய்ந்தாவது  நபராக 595 கூடுதல் வாக்குகள்  பெற்று கட்சியின் மத்திய குழுவுக்குத் தேர்வானார்.

2000ஆம் ஆண்டில் அமைச்சர் பதவியிலிருந்து விலகினாலும், 2011 ஆம் ஆண்டில் மக்கள் முன்னேற்றக் கட்சியில் இருந்து விலகும் வரை நாடாளுமன்ற உறுப்பினராகத் தொடர்ந்திருந்தார்.

2011 ஆம் ஆண்டு அரசுத் தலைவர் தேர்தலில் நாகமுத்து மக்கள் முன்னேற்றக் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிடுவார் எனப் பலராலும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் 24.10.2011இல் கட்சியில் இருந்து விலகினார்.

மாற்றத்திற்கான கூட்டமைப்பு கட்சி சார்பில்  – பிரதமர்

பின்னர் அவர்  “மாற்றத்திற்கான கூட்ட மைப்பு” என்ற அரசியல் கட்சியில் இணைந்து மீண்டும் நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெ டுக்கப்பட்டார்.  கயானா நாட்டின் அரசுத் தலைவரான டேவிட் கிரேஞ்சர் அந்நாட்டின் பிரதமராக இம்மாதத்தில் இவரை தேர்வு செய்துள்ளார்.

2001 ஆம் ஆண்டில் இவர் பிமீஸீபீக்ஷீமீமீ’ சிக்ஷீமீ என்ற நாவலை எழுதி வெளியிட்டார். 1950களிலும், 1960களிலும் விம் கிராமத்தில் குடிபுகுந்த சென்னை மீனவர்களின் வாழ்க் கையை விளக்கும்வகையில் நாவலாக எழுதியுள்ளார்

Leave a Reply