குடிதண்ணீர் – ஓர் ஆய்வு

தண்ணீரைக் கொதிக்க வைத்து குடிக்கக் கூடாது
. தண்ணீரைக் கொதிக்க வைத்து குடிக்கக் கூடாது. தண்ணீரை ஏன் கொதிக்க வைக்க வேண்டும்? நீரில் நோய்க்கிருமிகள் உள்ளது, அதனால் உடலில் நோய் வரும் என்ற ஒரே ஒரு காரணத்திற்காகத் தான் நாம் தண்ணீரைக் கொதிக்க வைக்கிறோம்.
சரி. ஒரு நாளைக்கு நாம் எவ்வளவு லிட்டர் நீர் அருந்துகிறோம்? இரண்டு அல்லது மூன்று லிட்டர். இந்த மூன்று லிட்டர் தண்ணீரில் எவ்வளவு நோய்க்கிருமிகள் இருக்கும். ஆனால் நாம் மூக்கின் வழியாக ஒரு நிமிடத்திற்கு எட்டு லிட்டர் வீதமாக ஒரு நாளைக்கு 11,600 லிட்டர் காற்றைக் குடிக்கிறோம். காற்றில் நோய்க்கிருமிகள் இருக்காது என்று யாராவது கூற முடியுமா? நாம் சுவாசிக்கும் காற்றில் உள்ள குப்பை, கூளம், தூசி பக்டீரியாக்களும், வைரசுக்களும் நம்முள் செல்கிறது. ஒரு நாளைக்கு குடிக்கும் 2 லிட்டர் தண்ணீரில் நோய்க்கிருமி இருக்கும். அதனால் நோய்வரும் என்று கூறுகிறார்களே? 11,600 லிட்டர் காற்றை குடிக்கிறோமே, இதன் மூலமாக நமக்கு நோய்கள் வராதா?

எனவே நாம் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் தண்ணீரிலும் நோய்க்கிருமிகள் இருக்கும். காற்றிலும் நோய்க்கிருமிகள் இருக்கும். 3 லிட்டர் தண்ணீரில் உள்ள நோய்க்கிருமிகள் நம் உடலில் நோயை உண்டுபண்ணும் போது 11,600 லிட்டர் காற்றில் உள்ள கிருமிகளும் கண்டிப்பாக நோயை உண்டுபண்ணும் அல்லவா? அந்தக் காற்றின் வழியாக செல்லும் நோய்கிருமியை உடம்பு என்ன செய்கிறது?
இந்தப் புத்தகத்தில் தடுப்பு ஊசி என்ற தலைப்பில் எழுதப்பட்டிருக்கும் விஷயங்ளை நீங்கள் படித்திருந்தால் உங்களுக்கு ஒரு விஷயம் புரிந்து விடும். உடலில் எந்த நோய்க்கிருமி சென்றாலும் நம் உடலில் உள்ள நோய் எதிர்ப்புத்தன்மை அந்த நோய்க்கிருமியை அழித்து விடும். இதற்கு எந்த ஒரு மருந்து மாத்திரையும் தேவையில்லை. அப்படி இருக்கையில் காற்றின் வழியாக உள்ளே செல்லும் நோய்க்கிருமிகளை என்ன செய்கிறதோ, அதையேதான் நீரின் வழியாக உள்ளே செல்லும் நோய்க்கிருமிகளையும் உடம்பு செய்யும். எனவே நீரைக் கொதிக்க வைத்து குடிப்பதில் எந்தப் பயனும் கிடையாது.
குடிக்கும் நீரில் நீர் பிராணன் உள்ளது. உயிர்ச்சக்தி உள்ளது. இது கண்ணுக்குத் தெரியாது. மேலும் குடிக்கும் நீரில் பல தாதுப்பொருட்களும், விட்டமின்களும் உள்ளன. இது நமது உடலுக்கு அத்தியாவசிய தேவைக்குப் பயன்படுகிறது. குடிக்கும் நீரில் தாதுப்பொருட்கள், உயிர்ச்சக்தி, நோய்க்கிருமி இது மூன்றும் இருக்கும்.
தண்ணீரைக் கொதிக்க வைப்பதால் நோய்க்கிருமி இறந்து விடுகிறது. ஆனால் அதே சமயத்தில் உயிர்ச்சக்தியும் அழிந்து விடுகிறது. தண்ணீரில் இருக்கும் அனைத்து தாதுப் பொருட்களும் ஒன்று ஆவியாகிப் போய் விடுகிறன அல்லது பிணமாக மிதக்கின்றன. இப்படி உயிருள்ள தண்ணீரை, தாதுப் பொருட்கள் உள்ள தண்ணீரைக் கொதிக்க வைப்பதனால் நாம் சப்பைத் தண்ணீராக மாற்றுகிறோம். இப்படித் தண்ணீரைக் கொதிக்க வைத்துக் குடிப்பதனால் அந்தத் தண்ணீரால் ஒரு மனித உடம்புக்கு எந்த ஒரு இலாபமும் கிடையாது. எனவே நம் இரத்தத்தில் உள்ள பல தாதுப்பொருட்கள் பற்றாக்குறையாக இருக்க ஒரே காரணம் நாம் தண்ணீரைக் கொதிக்க வைத்துக் குடிப்பது தான். உங்களுக்கு இந்த விஷயம் ஆச்சரியமாக இருக்கலாம். அதை உறுதி செய்வதற்கு ஒரு சின்ன சோதனை செய்யுங்கள். உங்கள் வீட்டில் உள்ள மீன் தொட்டியில் கொதிக்க வைத்து, ஆற வைத்து வடி கட்டிய தண்ணீரை ஊற்றி அதில் மீனை விட்டால் மீன் அன்றே இறந்து விடும். ஒரு மீன் கூட வாழ வழியில்லாத, உயிர்ச்சக்தி இல்லாத, பிராண சக்தி இல்லாத ஒரு நீர் தான் கொதிக்க வைத்து, ஆற வைத்து, வடிகட்டிய நீர். எனவே தண்ணீரைக் கொதிக்க வைத்துக் குடிக்கக் கூடாது.
சுனாமி, வெள்ளம், கொள்ளை நோய்கள் (Epidemic) வரும் காலகட்டங்களில் ஊரில் உள்ள அனைத்து நீர்களும் மாசுபட்டிருக்கும். இந்த நேரத்தில் ஊரில் உள்ள நீரில் ஆடு, மாடு இறந்து கிடக்கும், மண்ணாக இருக்கும், ஒரு சில நேரத்தில் மனித சடலங்கள் கூட கிடக்கலாம். இது போன்ற தருணங்களில் தண்ணீரைக் கொதிக்க வைத்து, ஆறவைத்து, வடிகட்டித்தான் குடிக்க வேண்டும். இது Emergency Period என்ற அவசர காலத்தில் மட்டுமே செல்லுபடியாகும். மற்றபடி சாதாரண வாழ்க்கையில் இப்பொழுது நாம் இருக்கும் இடங்களில் தண்ணீரைக் கொதிக்க வைக்க வேண்டிய அவசியம் கிடையாது.
அவசர காலங்களில் அந்த அழுக்குத் தண்ணீரை குடிப்பதால் நோய்வரும் என்பதற்காகக் கொதிக்க வைத்து, ஆறவைத்து, வடிகட்டிக் குடியுங்கள் என்று, என்றோ யாரோ ஒரு நாள் பிரச்சாரம் செய்த விஷயத்தை நாம் நல்ல விஷயம் என்று தினமும் பயன்படுத்துவது உடலுக்கு நோயை உண்டுபண்ணும். நம் உடலுக்கு இரண்டு வகையில் தாதுப்பொருட்களும், உயிர்ச்சத்து பொருட்களும் செல்கின்றன. ஒன்று நீரின் வழியாக, மற்றொன்று உணவின் வழியாக. நீரைக் கொதிக்க வைப்பதன் மூலமாக அவற்றை விரட்டியடிக்கிறோம். மேலும் உணவைச் சமைப்பது மூலமாக குறிப்பாகக் குக்கரில் சமைப்பது மூலமாக, மற்றும் எலக்ட்ரிக் டவ்வில்- electric stove சமைப்பது மூலமாக அந்த உணவில் உள்ள அனைத்து சத்துப் பொருட்களையும் நாம் வெளியேற்றி விடுகிறோம்.
ஒருவருடைய உடலில் இரத்த சோதனை செய்து பார்க்கும் பொழுது அந்த தாதுப்பொருள் இல்லை, இந்த தாதுப் பொருள் குறைவாக இருக்கிறது என்று கூறுவதற்கு காரணம் என்னவென்றால் தண்ணீரை கொதிக்க வைத்துக் குடிப்பதும், வேகவைத்த உணவுகளை சாப்பிடுவதும், குக்கரில் சமைப்பதும், Electric stove, Microwave oven மூலமாக சமைத்த பொருட்களைச் சாப்பிடுவதன் மூலமாக மட்டுமே ஏற்படுகிறது. எனவே இன்னும் இது போன்ற விஷயங்களை நாம் தவிர்க்க வேண்டும்.
குடிதண்ணீரை பில்டர் செய்யக் கூடாது.
நம் வீடுகளில் வாட்டர் பில்டர்-Water Filter எனும் தண்ணீரைச் சுத்தம் செய்வதற்குக் கருவிகளை வைத்திருக்கிறோம். இந்த வாட்டர் பில்டரில் ஒரு மூன்று மாதத்திற்குப் பிறகு அந்த பில்டரை வெளியில் எடுத்துப் பார்த்தால் வெள்ளையாக இருந்த வாட்டர் பில்டர் ஒரு மஞ்சள் நிறம் அல்லது பச்சை நிறத்தில் தூசுகளோடு இருக்கும். அதை உதறினால் தட்டினால் அதிலிருந்து மரத்தூள் போன்ற தூசுகள் கீழே கொட்டும். நாம் என்ன நினைப்போம் நல்லவேளை, இந்த வாட்டர் பில்டர் இருந்ததால் இந்த தூசுக்கள் நம் உடம்பிற்குள் செல்லவில்லை என்று. ஆனால் நான் என்ன நினைப்பேன் என்றால் இந்த தாதுப் பொருட்கள் இந்தக் குடும்பத்தில் உள்ள, வீட்டில் உள்ள மனிதர்களுக்கு செல்லவில்லையா? அவர்கள் நோயோடு இருப்பார்கள் என்று நினைப்பேன்.
கண்ணுக்கே தெரியாத அந்தத் தூசுகளை பணம் செலவு செய்து சில கருவிகளை வாங்கி அதிலுள்ள தாதுக்களை பிரித்து எடுத்துக் கீழே கொட்டுகிறோமே. அது தூசுக்கள் அல்ல, நம் உடலுக்குத் தேவைப்படும் அத்தியாவசிய தாதுப்பொருட்கள் ஆகும். நீங்கள் தண்ணீரைப் பார்த்தால் அதில் அந்தத் தூசுகள் கண்ணுக்குத் தெரியாது. பில்டரை பயன்படுத்தினால் மட்டுமே அந்தத் தூசுகள் கண்ணுக்குத் தெரியும். தண்ணீரில் கண்ணுக்கே தெரியாத தூசுகளைப் பார்த்து பயப்படுகிறோமே, கொத்து பரோட்டா, சிக்கன் 65, ஆனியன் ரோஸ்ட் என்று கடினமான பல பொருட்களைச் சாப்பிடும் நாம் கண்ணுக்கே தெரியாத அந்த சின்னச்சின்ன தாதுப் பொருட்களை ஏன் அவ்வளவு கஷ்டப்பட்டு பில்டர் செய்ய வேண்டும். யாருடைய வீட்டில் தண்ணீரை பில்டர் செய்வதற்கு மெஷின் இருக்கிறதோ அந்த வீட்டில் உள்ள அனைவரும் உங்கள் இரத்தத்தில் உங்களுக்குத் தேவையான தாதுப் பொருட்கள் இல்லாமல் மருந்துக் கடைகளில் சென்று இந்த தூசுகளை மருந்து என்ற பெயரில் வாங்கிச் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறீர்கள். தண்ணீரில் இருக்கும் அந்தத் தாதுப்பொருட்களை பில்டர் செய்யாமல் குடித்தால் நாம் மருந்து மாத்திரை என்ற தூசுக்களை சாப்பிடுவதை தவிர்க்கலாம். எனவே தண்ணீரை பில்டர் செய்யக் கூடாது. தண்ணீரை பில்டர் செய்து சாப்பிட்டால் மனிதருக்கு நோய் வரும்.
மினரல் பாட்டில் வாட்டர் -ஐ பயன்படுத்தலாமா?
மினரல் வாட்டர் பயன்படுத்தக் கூடாது. மினரல் வாட்டர் கம்பெனிகளில் Anti Scale Dosing machine என்று ஒரு மெஷின் இருக்கும். இந்த மெஷினின் வேலை தண்ணீரில் உள்ள அனைத்து தாதுப் பொருட்களையும் எடுத்து விட்டு சப்பைத் தண்ணீராக மாற்றுகிறது. எனவே நல்ல தண்ணீரை ஒன்றுமில்லாத சப்பைத் தண்ணீராக மாற்றுவதற்கு நாம் பல வேலைகளைச் செய்து அதைப் போத்தலில் அடைத்துப் பணம் கொடுத்து வாங்கிச் சாப்பிடுகிறோம். எனவே தயவுசெய்து போத்தலில் அடைக்கப்பட்ட மினரல் வாட்டர் என்று அழைக்கப்படும் Packaged Drinking Waterஐ யாரும் பயன்படுத்தக் கூடாது.
குடி நீரை இயற்கையாக சுத்திகரிக்கும் முறை என்ன?
தண்ணீரைக் கொதிக்க வைக்கக் கூடாது. பில்டர் செய்யக் கூடாது. போத்தலில் அடைக்கப்பட்ட நீரை பயன்படுத்தக் கூடாது. வேறு எப்படித்தான் தண்ணீரை சுத்தப்படுத்துவது என்று கேட்டால், சாதாரணமாக குழாயில் வரும் அந்தத் தண்ணீரை அப்படியே சாப்பிடலாம். அதை சுத்தம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. உலகத்திலேயே மிகப் பெரிய, மிகச்சிறந்த தடுப்பூசி சாதாரண குழாய் தண்ணீர் மட்டுமே. யார் ஒருவர் குழாய் தண்ணீரை நேரடியாகக் குடித்து வாழ்கிறார்களோ அவர்களுக்கு எந்த நோய்க்கிருமியாலும் நோய் வராது. நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாக இருக்கும். உடல் ஆரோக்கியமாக இருக்கும். எனவே தயவுசெய்து குழாயில் வரும் தண்ணீரை அப்படியே சாப்பிடுங்கள்.
குழாயில் வரும் தண்ணீரை எப்படிக் குடிப்பது?
தண்ணீரில் TDS அதிகமாக இருக்கிறது, தாதுப்பொருட்கள் அதிகமாக இருக்கிறது. சாக்கடைநீர் கலந்து வருகிறது என்றெல்லாம் மனதில் எண்ணம் தோன்றும். எங்கள் ஊர் தண்ணீரில் மாசு அதிகமாக உள்ளது என TV, பேப்பர் மூலமாகத் தெரிந்துக் கொண்டோம் என்று பலர் கூறுகிறீர்கள். உங்க ஊரில் மட்டுமல்ல உலகத்தில் உள்ள அனைத்து ஊரிலும் தண்ணீர் கெட்டுவிட்டதாக அந்தந்த ஊரில் உள்ள தண்ணீரைப் போத்தல் மூலமாக வியாபாரம் செய்யும் கம்பெனிகள் ஒன்று சேர்ந்து பிரச்சாரம் செய்கிறது. அப்பொழுது தானே நீங்கள் குழாய் தண்ணீரைக் குடிக்காமல் போத்தல் தண்ணீரை வாங்கிக் குடிப்பீர்கள் என்ற எண்ணத்தில் அவர்கள் பிரச்சாரம் செய்கிறார்கள்.
மேலும் மருந்து மாத்திரை கம்பெனிகள் தண்ணீரைக் கொதிக்க வைத்து மற்றும் பில்டர் செய்து மற்றும் பாட்டிலில் அடைக்கப்பட்ட நீரைப் பருகுவதால் உலக மக்களுக்கு நோய் வருகிறது என்பதை புரிந்து கொண்டு நல்ல விஷயத்தைப் பிரச்சாரம் செய்வது போல கெட்ட விஷயத்தை பணம் செலவு செய்து பிரச்சாரம் செய்து நம்மை நோயோடு இருக்க வைத்து, அதன் மூலமாக மருந்து மாத்திரை வியாபாரம் செய்வதற்குத் திட்டமிட்டு உள்ளார்கள். உண்மையிலேயே குழாய் தண்ணீர் குடித்தால் ஒன்றும் ஆகாது. இருந்தாலும் சில ஊர்களில் சாயப் பட்டறை இருக்கிறது, தண்ணீர் கெட்டிருக்கிறது என்று ஒருவேளை நாங்கள் நினைத்தால் உங்களது மனத்திருப்திக்காக சில காரியங்களைச் செய்யலாம். நான் கூறுவதுபோல உங்கள் தண்ணீரைக் கீழ்க்கண்ட முறையில் இயற்கையான முறையில் சுத்திகரிப்பதற்கு முயற்சி செய்யுங்கள்.
மண் பானை ஒரு மிகச் சிறந்த நீரை சுத்திகரிக்கும் கருவி.
மண் பானையில் குடிதண்ணீரை ஊற்றி வைத்து இரண்டு மணி நேரம் முதல் ஐந்து மணி நேரம் வைத்திருந்தால் அந்த தண்ணீரில் உள்ள அனைத்து கெட்ட பொருள்களையும் மண்பானை உறிஞ்சிக் கொண்டு அந்த நீருக்கு மண் சக்தியை அளிக்கிறது. எனவே உலகத்திலேயே மிகச் சிறந்த Water Filter மண் பானை ஆகும். நாற்பதாயிரம் ரூபாய் செலவு செய்து உங்கள் வீட்டில் Water Filter வாங்கி வைத்திருக்கிறீர்களே நாற்பதாயிரம் ரூபாய்க்கு மண் பானை வாங்கினால் எவ்வளவு பானை கிடைக்கும், தினமும் நாம் ஒரு பானையை உடைத்தால் கூட தீராது. ஆனால் அப்படிப்பட்ட அற்புதமான இயற்கையான ஒரு Water Filterஐ யாரும் பயன்படுத்துவதில்லை. எனவே தயவுசெய்து தண்ணீரை மண்பானையில் வைத்துக் குடித்தால் கெட்ட பொருள்களும் அழியும். மண்சக்தியும் கிடைக்கும், பிராண சக்தி அதிகரிக்கும்.
வெள்ளை நிற பருத்தித் துணியால் வடிகட்டலாம்.
வெள்ளை நிறத்தில் உள்ள சுத்தமான பருத்தித் துணியால் ஒரு தண்ணீரை வடி கட்டினால் அந்தத் தண்ணீரில் உள்ள அனைத்து நோயை உண்டுசெய்யும் வைரஸ், பக்டீரியா போன்றவற்றை இந்தத் துணி உறிஞ்சிக் கொள்கிறது என்ற உண்மை, அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இதனால்தான் அம்மை போன்ற நோய்கள் வரும்பொழுது நமது முன்னோர்கள் எந்த ஒரு மருந்து மாத்திரையும் சாப்பிடாமல் மருத்துவமனைக்குச் செல்லாமல் வெள்ளைத் துணியில் வடிகட்டிய நீரில் குளிப்பாட்டி குணப்படுத்தியிருக்கிறார்கள். எனவே தேவைப்பட்டால் இந்த முறையில் தண்ணீரைச் சுத்தப்படுத்தலாம்.
வாழைப்பழத் தோல் மூலம் சுத்தம் செய்யலாம்
நாம் சாப்பிடும் சாதாரண வாழைப்பழத் தோலை மண்பானைக்குள் இருக்கும் தண்ணீரில் இட்டு அரை மணி நேரத்திற்கு பிறகுவெளியே எடுத்து விட்டால் இந்த வாழைப்பழத் தோல் மண் பானையில் உள்ள நீரில் உள்ள அனைத்து கிருமிகளையும், கெட்ட பொருள்களையும் உறிஞ்சி எடுத்துவிடுகிறது. ஆனால் வாழைப்பழத் தோலை அதிக நேரம் தண்ணீரில் வைத்திருந்தால் அதுவே ஒரு குப்பையாக மாறிவிடும். எனவே அரை மணி நேரத்திற்குள் எடுத்து விட வேண்டும். இந்தச் சுலபமான நீரை சுத்திகரிக்கும் முறையையும் பயன்படுத்தலாம்.
செம்புக் காசு அல்லது செம்பு பாத்திரம் மூலம் சுத்தப்படுத்தலாம்
செம்பு என்ற உலோக பாத்திரத்தின் மூலமாக செய்யப்பட்ட ஒரு குடத்திலோ அல்லது செம்பிலோ நாம் நீரை இரண்டு முதல் ஐந்து மணி நேரம் வைப்பது மூலமாக தண்ணீருக்கு அதிகப் படியான சக்தி கிடைக்கிறது. அதில் உள்ள கெட்டப் பொருள் அழிக்கப்படுகிறது. எனவே செம்பு என்ற உலோகத்தின் மூலம் செய்யப்பட்ட பாத்திரங்களை தண்ணீர் வைக்க பயன்படுத்தலாம். அல்லது மண் பானையில் செம்புக் காசுகளை போட்டு வைத்தால் அந்த செம்பு காசுகள் தண்ணீரை சுத்தப்படுத்திக் கொண்டேயிருக்கும். பழங்காலத்தில் மலைகளில் தவம் செய்து வந்த ரிஷிகள், ஞானிகள், முனிவர்கள் எப்பொழுதுமே அருகில் ஒரு செம்பு கமண்டலத்தில் தண்ணீரை வைத்துக் கொண்டு இருப்பார்கள். அவர்களிடம் சென்று நீங்கள் ஏதாவது வம்பு பேசினால் அந்த தண்ணீரை எடுத்து நீ நாயாக போவாய் என்று சாபமிட்டவுடன் அந்த மனிதன் நாயாக போவதைப் போல நாம் படங்களில் பார்த்திருப்போம்.
செம்பில் வைக்கப்படும் தண்ணீருக்கு அவ்வளவு சக்தி உள்ளது. எனவே செம்பு என்ற உலோகத்தின் சக்தியின் மூலமாக நாம் தண்ணீரை சுத்தப்படுத்த முடியும். எனவே மேலே கூறப்பட்டுள்ள வகையில் மண்பானை, வெள்ளை பருத்தித் துணி, வாழைப் பழத் தோல், செம்பு என்ற உலோகம் மற்றும் பல இயற்கை முறையில் தண்ணீரை சுத்தப்படுத்துவதற்கு பல உத்திகள் இருக்கும் பொழுது நாம் ஏன் செயற்கை முறையில் சுத்தம் செய்வதற்கு கருவிகளை வாங்க வேண்டும்?
குடிக்கும் நீரை மாற்றி குடித்தால் சளி பிடிக்கிறது ஏன்?
ஒரு ஊரில் இருக்கும் தண்ணீரை குடித்தே பழக்கப்பட்ட நமக்கு அடுத்த ஊர் தண்ணீர் குடிக்கும்பொழுது சளி பிடிக்கிறது. சிலர் அவர்களுக்கு கொதிக்க வைத்த தண்ணீரையே குடித்து பழகி வருவார்கள். திடீரென கொதிக்க வைக்காத தண்ணீரை குடிக்கும் பொழுது அவர்களுக்கு சளி பிடிக்கும். இப்படி நாம் குடிக்கும் நீரை மாற்றிக் குடிக்கும் போது சளி பிடிக்கிறது. இதன் காரணம் என்ன?
கொதிக்க வைத்த தண்ணீரில் எந்த ஒரு தாதுப் பொருட்களும் இல்லாமல் பல வருடங்களாக குடித்து வரும் பொழுது அவரது உடலில் உள்ள இரத்தத்தில் பல தாதுப் பொருட்கள் இல்லாமல் உடல் நோய் வாய்ப்பட்டிருக்கும். ஒரு நாள் திடீரென கொதிக்க வைக்காத தண்ணீரை குடிக்கும் பொழுது அதில் பல விதமான தாதுப்பொருட்களும், சத்துப் பொருட்களும் இருக்கும். அதை அவரது சிறுநீரகம் எடுத்து இரத்தத்தில் கலந்து விடும். பல வருடங்களாக இரத்தத்தில் சில பொருட்கள் இல்லாமல் இருந்த காரணத்தால் திடீரென சில நல்ல பொருட்கள் இரத்தத்திற்குள் நுழைந்தவுடன் நமது உடலில் பல வருடங்களாக கழிவுகளை நீக்க வேண்டிய வேலையை இந்த தாதுப் பொருட்களை வைத்து கழிவுகளை வெளியேற்ற ஆரம்பிக்கிறது. இப்படி கழிவுகளை வெளியேற்றும் போது அது சளி வழியாகவோ அல்லது காய்ச்சல் வழியாகவோ அல்லது மலம் வழியாகவோ அனுப்பும். இதை நாம் நோய் என்று பயந்து விடுகிறோம்.
நம் உடலில் அனைத்து நோய்களுக்கும் ஐந்து காரணங்கள் என்று பார்த்தோம். (1.இரத்தத்திலுள்ள பொருட்களின் தரம், 2.இரத்தத்திலுள்ள பொருட்களின் அளவு, 3.இரத்தத்தின் அளவு, 4.மனம், 5.உடல் அறிவு) இந்த ஐந்து விஷயங்களும் ஒருவர் உடலில் சரியாக இருக்கிறதா, இல்லையா என்பதை கண்டுபிடிப்பதற்கு ஒரு எளிய சோதனை உண்டு. எந்த ஊர் தண்ணியையும் மாற்றி மாற்றி குடித்தால் ஒருவருக்கு சளியும் பிடிக்காமல் காய்ச்சலும் வராமல் எந்த வித உபாதையும் செய்யாமல் இருந்தால் அவருக்கு உடலில் ஐந்து விஷயமும் சரியாக இருக்கிறது என்று அர்த்தம். தண்ணீரை மாற்றிக் குடித்தால் ஒருவருக்கு காய்ச்சல் மற்றும் சளி பிடிக்கிறது என்றால் அவர் உடலில் பல நோய்கள் உள்ளது. அதை குணப்படுத்த தேவையான தாதுப்பொருட்கள் இல்லாமல் உடல் பல வருடங்களாகக் காத்துக் கொண்டிருக்கிறது என்று பொருள். எனவே உங்கள் உடல் ஆரோக்கியமாக இருக்கிறதா இல்லையா என்பதை இரத்த பரிசோதனை, ஸ்கேன் போன்றவை எடுக்கத் தேவையில்லை. தண்ணீரை மாற்றிக் குடித்தால் சளி பிடித்தாலே உங்கள் உடலில் நோய் இருக்கிறது என்பதைக் கண்டுபிடித்து விடலாம்.
எனவே தயவுசெய்து இன்றுமுதல் சாதாரண குழாய் தண்ணீரை இயற்கை முறையில் சுத்திகரித்து சாப்பிட ஆரம்பியுங்கள். இப்படி திடீரென சாதாரண தண்ணீரைக் குடிப்பதால் கண்டிப்பாக முதல் பத்து நாட்களுக்கு உங்களுக்கு சளி பிடிக்கும், காய்ச்சல் வரும். ஆனால் அதற்கு தயவுசெய்து பயப்பட வேண்டாம். அந்த சளியை சிந்திவிட்டு உங்களுக்கு காய்ச்சல் வரும் பொழுது இந்த புத்தகத்தில் காய்ச்சல் வந்தால் என்ன செய்ய வேண்டும் என்பதை கூறியிருப்போம். அதை படித்துவிட்டு அதன்படி நடந்துக் கொண்டால் இனி உங்கள் வாழ்க்கையில் எந்தத் தண்ணீரைக் குடித்தாலும் உங்களுக்கு எந்த தொந்தரவும் இருக்காது. நான் ஒன்றும் ஏதோ எழுத வேண்டும் என்பதற்காக இப்படி ஏதோ ஒரு புத்தகத்தில் படித்து விட்டு எழுதவில்லை. நான் 1992 முதல் இன்று வரை (2012) வரை நான் குழாய் தண்ணீரை மட்டுமே குடித்து வருகிறேன். எனக்கு எந்த சளியும், எந்த காய்ச்சலும் வருவதில்லை. இப்படி யார் குழாய் தண்ணீரை மட்டுமே குடித்து வாழ்கிறீர்களோ உங்களுக்கு, உங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் மெட்ராஸ் ஐ வரும் போது உங்களுக்கு வராது. சிக்கன் குனியா, மட்டன் குனியா போன்ற காய்ச்சல்கள் ஊரில் உள்ள அனைவருக்கும் வரும்பொழுது உங்களுக்கு மட்டும் வராது. உலகத்திலேயே மிகப் பெரிய தடுப்பூசி குழாய் தண்ணீர் தான். குழாய் தண்ணீரை எப்படி குடிப்பது, தொட்டி சுத்தமாக இல்லையே என்று பலர் கேட்கிறார்கள். தொட்டியை சுத்தம் செய்ய வேண்டியது உங்களது வேலை. வாட்டர் பில்டர் வாங்குவதற்கு முப்பதாயிரம் செலவு செய்யும் நீங்கள் தொட்டியை சுத்தம் செய்ய ஐம்பது ரூபாய் அல்லது நூறு ரூபாய் செலவு செய்தால் போதுமே.
எனவே நாம் குடிக்கும் தண்ணீர் உள்ள தொட்டியை சுத்தம் செய்வது நமது கடமை. சிலர் குழாய்களில் இரும்புத் துகள்கள் உள்ளது. தூசு உள்ளது அதனால் நோய்வரும் என்று பயப்படுகிறார்கள். முதலில் குழாயில் உள்ள எந்த தூசுக்களாலும், கிருமிகளாலும் நமக்கு நோய்கள் வரவே வராது. அப்படி ஒருவேளை உங்களுக்கு பயமாக இருந்தால் உங்கள் வீட்டில் உள்ள அனைத்து குழாய்களையும் ஐந்து அல்லது பத்து வருடங்களுக்கு ஒருமுறை புதிதாக மாற்றி விடுங்கள். இதற்கு பத்தாயிரம் ரூபாய் வரை செலவு ஆகலாம். தயவுசெய்து பணத்தை உங்கள் வங்கிகளில் சேமிப்பதையும், நகைகளிலும் செலவு செய்வதை விட்டுவிட்டு ஆரோக்கியத்திற்காக செலவு செய்யுங்கள்.
ஒரு மனிதன் ஒரு நாளில் எவ்வளவு லிட்டர் நீர் அருந்த வேண்டும்.
இந்த விஷயத்தில் பலருக்கும் பல குழப்பங்கள் உள்ளது. சிலர் கூறுகிறார்கள் ஒரு நாளைக்கு கண்டிப்பாக இரண்டு லிட்டர் அருந்த வேண்டும். சிலர் கூறுகிறார்கள் ஐந்து லிட்டர். சிலர் மூன்று லிட்டர். இப்படிப் பல மருத்துவர்கள் ஒரு நாளில் ஒரு மனிதன் இவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். இப்படி யார் அளவு பார்த்து தண்ணீர் குடிக்கிறீர்களோ உங்களுக்கு சிறு நீரக சம்பந்தப்பட்ட எல்லா நோய்களும் வரும் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். ஒரு நாளில் ஒரு மனிதன் இவ்வளவு லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று ஒரு கட்டாயம் கிடையவே கிடையாது. சுவிட்சர்லாந்து, நார்வே போன்ற குளிர்ச்சி அதிகமாக உள்ள நாடுகளில் நீங்கள் தினமும் இரண்டு லிட்டர் தண்ணீரை பருகினால் ஒரு வாரத்திற்குள் உங்கள் சிறுநீரகம் பழுதடைந்து விடும். இராஜஸ்தான், சகாரா போன்ற பாலைவனங்களில் வசிக்கும் நபர்களுக்கு ஒரு நாளைக்கு இரண்டு லிட்டர் தண்ணீர் போதாது.
ரோடு வேலை செய்யும் ஒரு நபர் காலை பத்து மணி முதல் மாலை ஆறு மணி வரை சூரிய வெயிலிலே சுடும் தாரிலே காலில் பூட்ஸ் அணிந்து தலையில் ஹெல்மெட் அணிந்து வேலை செய்யும் போது அவருக்குக் கண்டிப்பாக ஐந்து லிட்டருக்கு மேல் தேவைப்படும். ஒரு கம்ப்யூட்டர் இன்ஜினியர் ஏ.சி. அறையிலே வேலை செய்யும் போது ஒரு நாளைக்கு அவருக்கு ஒரு லிட்டர் போதும். ஒருநாள் ரோடு வேலை செய்யும் ஒருவர் அடுத்த நாள் அவரது நண்பருடன் ஏ.சி. காரில் பயணம் செய்யும் போது அவருக்குத் தண்ணீரின் அளவு மாறி விடுகிறது.
எனவே ஒரு மனிதன் ஒரு நாள் எவ்வளவு நீர் அருந்த வேண்டும் என்பது யாரும் சரியாகக் கூற முடியாது. இது வயது, உயரம், உடல் எடை, தட்ப வெப்ப நிலை, நாடு, அவரது மன நிலை, அவரது வேலை, அவர் வேலை செய்யும் இடத்தில் உள்ள அறைகள், ஏ.சி. இதைப் பொறுத்து மாறும். எனவே மனிதன் ஒரு நாளைக்கு இவ்வளவு லிட்டர் தண்ணீர் கண்டிப்பாகக் குடிக்க வேண்டும் என்பதை ஒத்துக் கொள்ள முடியாது. இப்படி யாராவது ஒரு நாள் இவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் தண்ணீர் குடிக்கும் பொழுது சிறுநீரகம் தேவை இல்லாமல் வேலை செய்து பழுதாகிறது.
சரி. ஒரு நாள் ஒரு மனிதன் எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என்பதை எப்படி கண்டுபிடிப்பது? அது எனக்கும் தெரியாது, உங்களுக்கும் தெரியாது, ஆனால் அவரவர் உடலுக்கு மட்டுமே தெரியும். எனவே தாகம் எடுக்கும் பொழுது மட்டுமே நீரை அருந்த வேண்டும். தாகம் எடுக்கும் பொழுது உங்களுக்குத் தேவையான அளவு மனதிற்கு பிடித்த அளவு, ஆசை தீர தண்ணீர் குடிக்க வேண்டும். மீண்டும் தண்ணீரை மறந்து விட்டு உங்களது வேலையைச் செய்து வர வேண்டும். மீண்டும் எப்பொழுது தாகம் எடுக்கிறதோ அப்பொழுது தான் தண்ணீர் அருந்த வேண்டும். குளிர் பிரதேசங்களில் இருக்கும் நபர்களுக்கு ஒரு நாளைக்கு நான்கு முறை தாகம் எடுக்கும். ஒவ்வொரு முறையும் கால் லிட்டர் தண்ணீர் அருந்தினால் தாகம் தீர்ந்து விடும். வெயில் பிரதேசத்தில் ஒரு நாளைக்குப் பத்து முறை தாகம் எடுக்கும். ஒவ்வொரு முறையும் அரை லிட்டர் தேவைப்படும். குளிர் பிரதேசத்தில் இன்று இருக்கும் ஒரு நபர் அடுத்த நாள் வெயில் பிரதேசத்திற்குச் சென்று விட்டால் அவரது தாகம் மாறும். எனவே தயவுசெய்து ஒரு நாளில் இவ்வளவு நீர் குடிக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் யார் யாரெல்லாம் தண்ணீர் குடிக்கிறீர்களோ அளவுக்கு அதிகமாகவோ அல்லது அளவுக்குக் குறைவாகவோ உடலுக்குள் சென்று நோயை ஏற்படுத்துகிறது. எனவே தயவு செய்து அளவு பார்த்துத் தண்ணீர் குடிக்காதீர்கள். தாகம் எடுத்தால் தேவையான அளவு. மீண்டும் தாகம் எடுத்தால் தேவையான அளவு குடித்தால் இன்று உங்கள் உடம்புக்கு எவ்வளவு தண்ணீர் வேண்டும் என்று என்பதை உடம்பே சரியான முறையில் நமக்கு தகவல் தெரிவித்துப் பெற்றுக் கொள்ளும். இதுவே ஒரு நாளில் நாம் குடிக்கும் தண்ணீரின் சரியான அளவாகும்.
சில மருத்துவர்கள் தண்ணீர் நிறைய குடியுங்கள் என்று கூறுவார்கள். இப்படி யார் யாரெல்லாம் தேவையான அளவுக்கு அதிகமாக தண்ணீர் குடிக்கிறீர்களோ உங்களது சிறுநீரகம் தேவையில்லாமல் வேலை செய்து பழுதடைவதற்கு வாய்ப்பு உள்ளது. தண்ணீர் தாகம் இல்லாமல், மருத்துவர் கூறுகிறார் என்று நீங்கள் தேவையில்லாமல் தண்ணீரை அருந்தினால் சிறுநீரகம் நம்மை திட்டும். சிறுநீரகம் ஒரு வேலையைப் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது நமக்குத் தாகம் என்ற உணர்ச்சி ஏற்படாது. தாகம் எடுக்காதபோது நாம் அருந்தும் தண்ணீர் சிறுநீரகம், தான் செய்யும் வேலையை விட்டு விட்டு நாம் குடித்த நீரை ஜீரணம் செய்ய வந்து விடும். இந்த தண்ணீரை தேவையில்லாமல் நாம் அருந்திய தண்ணீரை ஜீரணம் செய்து முடித்து விட்டு மறுபடியும் தான் வேலையை செய்ய செல்வதற்குள் மீண்டும் நாம் நீர் அருந்தினால் சிறுநீரகத்தின் வேலைகள் பாதிப்படைந்து சிறுநீரக கல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மேலும் சிறுநீரகம் பழுதடைவதற்கும் வாய்ப்பு உள்ளது. அதேபோல் தாகம் எடுத்து தண்ணீர் குடிக்காமல் இருந்தாலும் சிறுநீரகம் பழுதடையும். தாகம் என்பது என்னவென்றால் சிறுநீரகம் நம்மிடையே பேசும் பாசை. சிறு நீரகத்திற்கு எப்பொழுது நீர் தேவைப்படுகிறதோ அது நமக்குத் தாக உணர்ச்சியை ஏற்படுத்தும். நாம் நீர் அருந்தினால் அது சரியான முறையில் ஜீரணம் செய்யும்.
சிலர் பேருந்தில் அமர்ந்து பத்து ரூபாய்க்கு டிக்கெட் எடுத்து விடுவார்கள். நன்றாக தாகம் வரும். நாம் ஊருக்குச் சென்று வீட்டில் தண்ணீர் அருந்திக் கொள்ளலாம் என்று அமைதியாக அமர்ந்து விடுவார்கள். ஐந்து மணி நேரத்திற்குப் பிறகு வீட்டிற்குச் சென்று தண்ணீர் அருந்துவார்கள். இந்த ஐந்து மணி நேரமும் நம் உடல் நம்மிடம் தண்ணீர் கேட்டுக் கொடுக்காமல் இருந்தால் சிறுநீரகம் நம் உடலில் உள்ள அனைத்து உறுப்புகளில் உள்ள அனைத்து நீரையும் உறிஞ்சி தன் வேலையை ஆரம்பிக்கும் பொழுது உடலில் உள்ள அனைத்து உறுப்புகளுக்கும் நோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே தாகம் எடுத்தால் உடனே தண்ணீர் குடிக்க வேண்டும். குடிக்காமல் இருந்தால் நோய்.
அதேபோல் தாகம் இல்லாமல் தண்ணீரைக் குடிக்கக் கூடாது. தாகம் இல்லாமல் தண்ணீரைக் குடித்தாலும் நோய். ஆகவே தயவு செய்து ஒரு நாளைக்கு இவ்வளவு லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்பது தேவையில்லாதது. மேலும் தண்ணீர் அதிகமாகக் குடித்தால் நோய் குணமாகும் என்ற தவறான செய்தியையும் மறந்து விடுங்கள். இனிமேல் தாகம் எடுத்தால் உடனே நீர் அருந்துங்கள். ஆசை தீர மனதிற்கு பிடித்தது போல நீர் அருந்துங்கள். மீண்டும் தாகம் எடுக்கும் வரை காத்திருங்கள். மீண்டும் தாகம் எடுத்தால் ஆசை தீர தண்ணீர் அருந்துங்கள். நம் உடம்பு இன்றைக்கு எவ்வளவு நீர் வேண்டும் என்பதை அதுவே சரியான முறையில் நம்மிடமிருந்து வாங்கிக் கொள்ளும்.

தண்ணீரைக் குடிக்கக் கூடாது, சப்பி சப்பிச் சாப்பிட வேண்டும்.
தண்ணீரைச் சாப்பிட வேண்டும். உணவைக் குடிக்க வேண்டும் என்று ஒரு பழமொழி உள்ளது. உணவை வாயில் வைத்து நன்றாக மென்று கூழ் போல செய்து நீராகாரமாக மாற்றிக் குடிக்க வேண்டும் என்பதே அதன் பொருள். தண்ணீரை மெதுவாக உணவு சாப்பிடுவதைப் போல சப்பி சப்பிச் சாப்பிட வேண்டும் என்பதே அதன்பொருள். தண்ணீரில் ஆறு சுவைகள் உள்ளது.தண்ணீரை மெதுவாக சப்பி சப்பிக் குடிப்பது மூலமாக நம் உடலுக்கு தேவையான ஆறு சுவைகளை பெற்றுக் கொள்ளலாம்.
மேலும் தண்ணீரில் உமிழ் நீர் கலந்து வாயில் உள்ள நொதிகள் கலந்து உள்ளே செல்வதால் நம் உடலுக்குப் பல விதமான நன்மைகள் ஏற்படுகின்றன. மேலும் தண்ணீரில் உள்ள அனைத்துக் கிருமிகளையும் மற்றும் தண்ணீரை நமது உடல் வெப்ப நிலைக்கு மாற்றுவதற்கும் டான்சில் (உள்நாக்கு) எனப்படும் உறுப்பு உதவி செய்கிறது. வேகமாக அண்ணாந்து கடகடவென தண்ணீர் குடிப்பவர்களுக்கு இந்த தண்ணீர் உள்நாக்கில் நோய்கள் வர வாய்ப்புள்ளது. ஏனென்றால் தண்ணீர் வேகமாக உள்நாக்கு வழியாகக் கடக்கும் போது உள்நாக்கு வேகமாக வேலை செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு உட்படுத்தப் படுகிறது. எனவே அதில் நோய்கள் வருவதற்கு வாய்ப்புள்ளது. தண்ணீரை எவ்வளவு மெதுவாக குடிக்கிறமோ அவ்வளவு தூரம் நம் உடலுக்கு ஆரோக்கியமும் சக்தியும் கிடைக்கும். உள்நாக்கு வளர்தல், வீசிங், நெஞ்சு சளி போன்ற நுரையீரல் சம்பந்தப்பட்ட மூக்கு சம்பந்தப்பட்ட சைனஸ் போன்ற எந்த வியாதியும் நமக்கு வராது. வந்தால் அது உடனே குணமாகி விடும். எனவே தண்ணீரை மெதுவாக சப்பி சப்பிச் சுவையை ரசித்து குடிக்கலாம்.
சிறுநீர் கழித்தவுடன் நீர் குடிக்க வேண்டும்.
எப்பொழுதெல்லாம் நாம் சிறுநீர் கழிக்கிறமோ அப்பொழுதெல்லாம் நமக்குத் தண்ணீர் தேவைப்படுகிறது என்று பொருள். எனவே சிறுநீர் கழித்தவுடனேயே குறைந்த அளவாவது நீரைச் சாப்பிடுவதால் நம் உடல் ஆரோக்கியமாக இருக்கும். எனவே வாய்ப்பிருந்தால், முடிந்தால் சிறுநீர் கழித்தவுடன் தண்ணீர் சிறிதளவு சாப்பிடுவோம்.
நல்ல குடிநீர் என கண்டுபிடிப்பது எப்படி?
ஒரு குடிதண்ணீர் நல்லதா? கெட்டதா? என்பதை ஆராய்ச்சி செய்வதற்குச் சுலபமான ஒரு வழி. தண்ணீரில் மீனை வளர்த்து அந்த மீன் எந்தத் தண்ணீரில் உயிருடன் இருக்கிறதோ அந்த தண்ணீர் குடிப்பதற்கு உகந்த நீர். குழாய்நீர் எடுத்து அதில் மீனை போட்டால் அது மூச்சுத் திணறினால் அந்த குழாய்நீரில் உயிர்ச்சத்து இல்லை என்று பொருள். நீங்கள் சோதனைசெய்து பார்க்கலாம். நிலத்திற்குக் கீழே 10 அடி, 15 அடி வரைக்கும் தான் தண்ணீரில் உயிர்ச்சத்து என்ற பிராண சத்து இருக்கும். 50 அடி, 100 அடி ஆழத்தில் உள்ள குழாய்நீரை எடுத்து அதில் மீனை விட்டால் உடனே மீன் இறந்து விடும். எனவே நீங்கள் குடிக்கும் தண்ணீர் நல்ல தண்ணீரா அல்லது கெட்ட தண்ணீரா என்பதைக் கண்டறிவது மிகவும் சுலபம். குடிக்கும் நீரில் மீனை வளர்த்து 24 மணி நேரம் மீன் எந்தவொரு ஆபத்தும் இல்லாமல் வாழ்ந்தால் அந்த நீரை நாம் குடிக்கலாம்.
எனவே மேலே சொல்லப்பட்ட வழிமுறைகளில் நாம் நீரை குடிப்பது மூலமாக தண்ணீரை நல்ல முறையில் ஜீரணம் செய்து, இரத்தத்தில் கலந்து, இரத்தத்தில் உள்ள நீர்ச்சக்தியையும் நீர் சம்பந்தப்பட்ட பொருளையும் நல்லப் பொருளாக சரியான அளவு வீரியத்துடன் வைப்பதற்கு உதவி செய்யும். வாழ்வோம் ஆரோக்கியமாக !
-ஹீலர் பாஸ்கர் Anayomic Therapy

4 comments

  1. மிகவும் பயனுள்ள தகவல்களை சொன்னீங்கள் மிகவும் நன்றி அய்யா…!

Leave a Reply