எலுமிச்சம்பழ ரசம்

 தேவையான பொருட்கள்:

  • எலுமிச்சம்பழம்– 1 1/2
  • துவரம் பருப்பு– 4 தேக்கரண்டி
  • ரசப்பொடி– 1/4 தேக்கரண்டி
  • மிளகுப்பொடி– 1 தேக்கரண்டி
  • பச்சை மிளகாய்– 2
  • இஞ்சி– சிறு துண்டு
  • பெருங்காயப்பொடி– சிறிது
  • உப்பு– தேவையான அளவு
  • தக்காளி– 1
  • நெய்– 2 தேக்கரண்டி
  • கடுகு– 1 தேக்கரண்டி
  • கொத்தமல்லித் தழை

 செய்முறை விளக்கம்:

  • ஒரு பாத்திரத்தில் 1 1/2 கப் தண்ணீரைக் கொதிக்கவிடவும்.
  • அதில் பெருங்காயப்பொடி, உப்பு, ரசப்பொடி சேர்க்கவும். இஞ்சியை நசுக்கிப் போடவும். ஒரு பச்சை மிளகாயை சிறு துண்டுகளாக்கி சேர்க்கவும். தக்காளியை நறுக்கிப் போடவும்.
  • ரசம் கொதித்து ஒரு கப் அளவு வந்ததும், அதில் வெந்த துவரம்பருப்பை மசித்து, ஒரு கப் நீருடன் சேர்த்து விடவும்.
  • மேலே நுரைத்து வந்ததும் இறக்கவும்.
  • நெய்யைக் காயவைத்து அதில் கடுகு போட்டு வெடித்ததும், நறுக்கிய பச்சை மிளகாய், மிளகுப்பொடி சேர்த்து ரசத்தில் கொட்டவும்.எலுமிச்சையை சாறு பிழிந்து கொட்டையில்லாமல் சேர்க்கவும். கொத்தமல்லி தழையைக் கிள்ளிப்
  • போடவும்.
  • மணமான, ருசியான சூடான ரசத்தை சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம்…. அப்படியே குடித்தாலும் அருமையாக இருக்கும்.

Leave a Reply