4 கால்கள், 2 பிறப்பு உறுப்புடன் ஆண் குழந்தை

கர்நாடக மாநிலம், ராய்ச்சூர் மாவட்டம் புலந்தின்னி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சென்னபசவா (26), லலிதம்மா (23) தம்பதி. கர்ப்பமாக இருந்த லலிதம்மாவுக்கு அப்பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த சனிக்கிழமை அதிகாலை ஆண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு 4 கால்களும் 2 பிறப்புறுப்புகளும் இருந்ததைக் கண்டு மருத்துவர்கள் ஆச்சரியம் அடைந்தனர்.

இதையடுத்து, பிரசவம் பார்த்த மருத்துவர் விருபக் ஷா அறிவுரை யின்பேரில், அந்தக் குழந்தையை பெல்லாரியில் உள்ள விஜயநகர மருத்துவ அறிவியல் கழகத் தின் (விஐஎம்எஸ்) பச்சிளங் குழந்தைகள் பிரிவில் அனுமதித் துள்ளனர். அங்கு குழந்தைக்கு உயர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தக் குழந்தை எங்களுக்கு இறைவன் கொடுத்த பரிசு எனக் கூறி விஐஎம்எஸ் மருத்துவமனைக்கு அனுப்ப லலிதம்மா மறுத்துள்ளார். பின்னர் உறவினர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் அறிவுரை கூறியதையடுத்து உயர் சிகிச்சைக்கு ஒப்புக் கொண்டுள்ளார்.

Leave a Reply