3000 ஆசனம்… முறியடிச்சுக் காட்டணும் !

‘யோகாவில் 3,000 வகையான செய்முறைகளை உருவாக்கியதுதான் இதுவரைக்கும் கின்னஸ் சாதனையா இருக்கு. அந்தச் சாதனையை முறியடிக்கணும். அதோடு, 10,000 புதிய செய்முறைகளை உருவாக்கணும்.”

எனப் புன்னகைக்கிறார் தேவி. திருப்பூர், பப்ளிக் மெட்ரிக் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு மாணவி. 2013 தேசிய யோகா போட்டியில் முதல் பரிசு வென்று, தமிழகத்துக்கு பெருமை சேர்த்த சுட்டி ராணி. மாநில அளவில் பல்வேறு போட்டிகளில் பரிசுகளை அள்ளியிருக்கிறார்.

‘‘என் அம்மா, அப்பா ரெண்டு பேருமே யோகா மாஸ்டர்ஸ். அப்பா, இன்டர்நேஷனல் யோகா  போட்டியில் இரண்டாம் இடம் பிடிச்சவர். தினமும் காலையில் ரெண்டு மணி நேரம் பயிற்சி எடுப்பாங்க. நானும் என் தங்கையும் கண் விழிக்கும்போது, பார்க்கிற முதல் காட்சியே அவங்க யோகாசனம் செய்றதுதான். அதான், எங்களுக்கும் யோகா ஆர்வம் வந்தது. என் தங்கை தர்ஷனா, 100 வகை ஆசனங்களைச் செய்வாள். இவள் வணக்கம் சொல்லும் ஸ்டைலைப் பாருங்களேன்” என்று சிரித்தார் தேவி.

முன்னால் வந்து நின்ற நான்கு வயது தர்ஷனா, சட்டென கால் முட்டியை நெற்றிக்குக் கொண்டுவந்து சல்யூட் வைத்தார்.

இவர்களின் தாய் உமா மகேஷ்வரி, ‘‘தேவி,  ரெண்டு வயதிலிருந்தே யோகா பயிற்சிகளை ஆரம்பிச்சுட்டா. இன்டர்நேஷனல் யோகா போட்டியில் சாம்பியன் ஆகணும்னு ஆசை. அந்தப் எடுப்பதுதான்,  தேவியின் லட்சியம்.

‘‘யோகாவில் இத்தனை வகைகளைச் செய்யணும்னா, உடம்பை கட்டுக்கோப்பாக வெச்சுக்கணும். சாப்பிடுறதில் ஆரம்பிச்சு, சின்னச் சின்ன விஷயங்களிலும் சரியா நடந்துக்கணும். பயிற்சியை ஒருநாள்கூட தள்ளிப் போடக் கூடாது. சாதாரணமா உட்காரும்போதும்கூட சம்மணம் போட்டு முதுகு நிமிர்ந்து உட்காரணும். ரொம்ப சூடாவும் சாப்பிடக் கூடாது, ரொம்பக் குளிர்ச்சியாவும் சாப்பிடக் கூடாது.

அதனாலே, ஐஸ்க்ரீம், பஜ்ஜி என எத்தனையோ விஷயங்களைத் தொடுறது இல்லை. ஃப்ரெண்ட்ஸ் சாப்பிடுறதைப் பார்த்தாலும் ஏக்கமோ, ஆசையோ இருக்காது. ஏன்னா, அந்த அளவுக்கு யோகாவை  நேசிக்கிறேன். ஐ லவ் யோகா” என்று சொல்லி அழகாகச் சிரிக்கிறார் தேவி.


போட்டியில் கலந்துக்க 10 வயதுக்கு மேலே இருக்கணும். இந்த வருடம் 10 வயது முடிஞ்சதும், அந்தப் போட்டிக்கு அப்ளை பண்ணப்போகிறோம்” என்றார். அந்தப் போட்டியில் பங்கேற்று, ‘இளம் வயதில் சர்வதேச சாதனை புரிந்தவர்’ என்று பெயர்


யோகா சில துளிகள்…

உடலையும் மனத்தையும் உறுதிப்படுத்தும் யோகா கலை, பண்டைய இந்தியாவில் தோன்றி, உலகம் முழுவதும் பின்பற்றப்படுகிறது. யோகம் என்ற சொல்லுக்கு, ‘இணைதல்’ என்று பொருள்.

l5,000 ஆண்டுகளுக்கு முன்பு, காட்டில் வாழ்ந்த முனிவர்கள், பறவைகள் மற்றும் விலங்குகளின் செயல்களை ஆராய்ந்து, இந்த யோகாசனங்களை உருவாக்கினர்.

யோகக் கலையை நூல் வடிவில், முதன்முதலில் அளித்தவர், பதஞ்சலி முனிவர்.

சிந்துசமவெளி நாகரிகத்தி்ன் ஆய்வில், யோக முத்திரை பற்றிய குறிப்புகள் உள்ளன.

புத்த மதம், சமண மதம் எனப் பல்வேறு மதங்களில், மத விஷயங்களுடன் யோகா தொடர்புபடுத்தப்பட்டுள்ளது.

 

http://www.vikatan.com/new/article.php?module=magazine&aid=99772

Leave a Reply