பழனிக்கு சென்று ஏமாறாமல் முறையாக தரிசனம் செய்ய…

பழனிக்கு சென்று ஏமாறாமல் முறையாக தரிசனம் செய்ய…

எப்போது போனாலும் இதை மறவாதீர்கள்..
பழனியில் மலைக்கு ஏறும் முன் கீழே திரு ஆவினன்குடி (இதுதான் முருகனின் 3ம் படை வீடு) கோவிலுக்கு வெளிச்சுவர் பகுதியிலேயே முடி காணிக்கை (முடி கொடுகாதவர்கள் குளித்துவிட்டு செல்லலாம்) இடம் உள்ளது. முடி எடுத்த பின் அருகிலேயே குளிப்பதற்கு இலவசமாக அருமையான இடம் கோவிலோடதே உள்ளது. பின்னர் திரு ஆவினன் குடி கோவிலில் குழந்தை வேலாயுத சுவாமி யை தரிசித்து விட்டு வெளியேறி மலைப்பாதை நோக்கி செல்லும் வழியில் உள்ள கடைகளில் காலணிகள், பைகளை காசு கொடுத்து வைத்து டோக்கன் வாங்கிக் கொண்டு அடிவாரத்துக்கு சென்று விநாயகரை கும்புட்டு மலை ஏற வேண்டும். யார் கூப்பிட்டாலும் எதுவும் பேசாமல் மலையை அடைந்து இலவச தரிசனம், கட்டண தரிசனம் என்று உண்டு. அங்கே அதன் வழியே சென்று சாமியை தரிசிக்கலாம். மேலும் சிறப்பு தரிசனம்க்கு கவுண்டரிலேயே டிக்கட் வாங்கி செல்லலாம்.
கால பூஜைக்கு மட்டும் சுவாமி தரிசனம் செய்து வெளியே வருகிற கதவுக்கு பக்கத்தில் ஒரு வழி இருக்கும். அதன் வழியே சென்றால் ஒரு நபருக்கு ரூ 150/- கால பூஜை டிக்கட் கொடுப்பார்கள். வாங்கிக்கொண்டு சுவாமியின் பின்பக்க வழி வழியாக வந்து சுவாமிக்கு முன்பக்கம் அமரச்செய்து அபிசேகம், அலங்கார தரிசனம் செய்யலாம். அப்போது பழனி முருகனின் நவபாஷான உடம்பில் பட்டு வந்த அபிஷேக விபூதி கொடுப்பார்கள். அதை நோயாளிகள் மட்டுமின்றி யாரும் கொஞ்சம் சாப்பிடலாம். அரு மருந்து விபூதி அது. காணிக்கை உங்கள் விருப்பம்.
பின் பிரகாரம் வந்து வலது பக்கத்தில் போகர் சித்தரின் சன்னிதி உள்ளது. அவரை தரிசித்து பின் கைலாசநாதர் சன்னதியில் சிவனை தரிசனம் செய்து கொண்டு வெளியே வந்து 18 சித்தர்களை தரிசித்து அருகே விநாயகரை வணங்கி கோவிலை சுற்றி வந்து கொடிமரம் வந்து முருகருக்கு நன்றி சொல்லி வணங்கி பின் மலை இறங்கலாம்.
பின் பழனி தரிசனம் முழூமை அடைய மலையிலிந்து பேரூந்து நிலையம் வந்து பொள்ளாச்சி செல்லும் வழியில் 4, 5 கிமீ ல் பெரிய நாயகி அம்மன் கோவில் உண்டு. இங்குதான் தைப்பூச தேர் இழுப்பார்கள்! பெரியநாயகி அம்பாளை தரிசனம் செய்தால்தான் பழனி யாத்திரை முழுமை பெறும்.
ஓம் சரவணபவாய…

யாரிடமும் ஏமாறாமல் இதை பின்பற்றுங்கள்.

Leave a Reply