14 செகண்டு

தனித்துவமான முகங்களின் ரசிகன் நான்.
ஆனால் ஆண்கள் முகம் என்றால்13 செகண்டுக்குள்ளாகவும், பெண்கள் முகம் என்றால் 14 செகண்டுக்கு மேலயும் பார்த்து ரசிக்கும் அளவுக்கு முகங்களின் ரசிகன் என்பதையும் சேர்த்து சொல்ல ஆசைதான்.. ஆனால் நமக்கு எதுக்கு வம்பு.. 🙂
இந்த கார்ட்டூனில் இருப்பவர் எழுத்தாளர் மாமல்லன் Vimaladhitha Maamallan சென்னை விமான நிலையத்தின் கஸ்டம்ஸ் பிரிவில் பணி புரிகிறார்.
நேர்மையானவர். தவறு செய்தது எவறாக இருந்தாலும்  கால்குலேசன் போட்டு பல்லைக்காட்டுவது என்ற சில பல எழுத்தாளர்களின்  இயல்புபடி இல்லாமல் நேர்மையாக  விமர்சிக்க கூடியவர்.
தற்செயலாக அவரது புகைப்படம் பார்த்தேன்.. ஒரு கார்ட்டூனிஸ்ட்டுக்கு பிடிக்கக்கூடிய அத்தனை அம்சங்களும் கொண்ட முகம்.. உடனே கிறுக்கணும்போல இருந்துச்சு.. அதான் இந்த கிறுக்கல்.
திரைத்துறை நண்பர்கள் தங்கள் படங்களுக்கு அட்டகாசமான முகம் வேண்டும் என்றால் இவரை மைண்டில் வைத்துக்கொள்ளவும்..
மற்றபடி இந்த பதிவுக்கும், பப்ளிசிட்டி தெய்வங்களால் பாதிக்கப்பட்ட கால்டாக்ஸி டிரைவருக்காக அவர் ஃபைட் பண்ணுவதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.. 😉
-கார்ட்டூனிஸ்ட் பாலா

17-8-16

Leave a Reply