​ஸ்ரீவில்லிபுத்தூரின் பெருமைகள்

கோதை பிறந்த ஊர்;கோவிந்தன் வாழும் ஊர்;சோதி மணி மாடம் தோன்றும் ஊர்;நீதி நெறி வழுவாதவர்கள் வாழும் ஊர்;என்பது ஸ்ரீவில்லிபுத்தூர் பற்றிய பெருமைப் பாடல்வரி!

தெற்கு எல்லையில் அருள்மிகு மடவார்வளாகம் ஆலயம் அமைந்திருக்கிறது;அருள்மிகு வைத்தியநாதசுவாமி+சிவகாமி அம்பாள் சமேதராக ஈசன் ஆட்சிபுரிந்து வருகிறார்;இந்த ஆலயத்தின் பெயரே இந்த ஊரின் பழைய பெயராக அமைந்திருக்கிறது;ஆமாம்! ஸ்ரீவில்லிபுத்தூரின் பழைய பெயர் புதுவை;இந்த ஆலயத்தின் பழைய பெயரும் புதுவைத்தலம் ஆகும்;
ஜீரத்தை நீக்கும் ஜீரத்தேவர் சன்னதி இங்கே இருக்கிறது;ஒவ்வொரு மனிதர்களின் ஆயுள் மற்றும் தொழிலை நிர்ணயிக்கும் சனீஸ்வரன் இங்கே தனி சன்னதியில் அருள்பாலித்துவருகிறார்;வராகியின் அம்சமான விஷ்ணு துர்கை இங்கே அருள்பாலித்துவருகிறாள்;அனைத்துக் கடவுளர்களின் தலைமைக் கடவுளாக இருக்கும் மனோன்மணி அன்னை இங்கே மூலவராகிய வைத்தியநாதசுவாமியின் சன்னதியில் இருந்து அருள்பாலித்து வருகிறாள்;இந்த ஆலயத்தின் ஸ்தலவிருட்சம் வன்னி மரம்;இது சனிபகவானின் விருட்சம் ஆகும்;சனிக்கிழமைகளில் காலை 9 முதல் 10.30க்குள் இந்த விருட்சத்தை 8 முறை வலம் வந்து வணங்கினாலே சனியின் தாக்கம் பெருமளவு குறைந்துவிடும்;
மஹாலக்ஷ்மியின் அம்சமான கோதையை இந்த ஊரில் மட்டும் நாச்சியார் என்று அழைப்பர்;இவள் இங்கே அவதரித்ததால்,இங்கே பசுவளம் அதிகம்;அதுமட்டுமல்ல;பசுவின் பால் சுவை இந்த ஊரில் மட்டும் தனிப் பெரும் சுவையாக அமைந்திருக்கிறது;அந்தச் சுவையே ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவாக பரிணமித்தது;1964 ஆம் ஆண்டு வரை ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா உலகம் முழுக்க ஏற்றுமதி ஆகியிருக்கிறது;
அதன்பிறகு,அமெரிக்காமுதலான வல்லரசு நாடுகளின் நரித்தனத்தால்,பால்கோவா ஏற்றுமதியைத் தடை செய்துவிட்டனர்;இன்று வரை தடை செய்யாமல் இருந்திருந்தால்,ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவில் மட்டும் 1000 ரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கும்;வீணாப் போன(உடலுக்குத் தீங்கு தரும்) பிஸ்ஸாவை விட,ஆரோக்கியம் தரும் பால்கோவா உலக மக்களால் அதிகம் விரும்பப்பட்டிருக்கும்;
புத்தகவாசிப்புக்காக சாகித்ய அகாடமிவிருது பெற்றவர்,சந்திக்கிணற்றுத்தெருவில் வசித்துவருகிறார்;

மாவட்டத் தலைநகரத்தில் தான் மாவட்ட நீதிமன்றவளாகம் அமைவது வழக்கம்;அந்த வழக்கத்தை மீறி,விருதுநகர் மாவட்ட நீதிமன்ற வளாகம் ஸ்ரீவில்லிபுத்தூரில் சிவகாசி சாலையில் அமைக்கப்பட்டிருக்கிறது;சாம்பல் நிற அணில் சரணாலயம் அமைக்கப்பட்டிருப்பது இங்கே மட்டுமே! ஆமாம்! செண்பகத் தோப்புப்பகுதியில் அமைக்கப்பட்டிருக்கிறது;22 சமுதாயத்தவர்களுக்குக் குலதெய்வமான அழகர் கோவிலும் இங்கே அமைந்திருக்கிறது;
அருள்மிகு கைகாட்டிசுவாமிகள்,பொன்னாயிரசுவாமிகள்,பாம்புதின்னிசுவாமிகள்,வெள்ளையப்பசுவாமிகள் ஜீவசமாதிகள் சாலியர் தெருக்களில் அமைந்திருக்கின்றன;உலகத்திலேயே பனை ஆராய்ச்சி மையம் இங்கேதான் ஆரம்பிக்கப்பட்டது;வடகிழக்கு எல்லையில் அருள்மிகு சீனிவாசப்பெருமாள் ஆலயம் மலைமீது அமைந்திருக்கின்றது;அதன் எதிர்ப்புறம் இருக்கும் மலைப்பகுதிக்குப்பின்புறம் சென்றால்,சித்தர்கள் அடிக்கடி வந்து செல்லும் நரிப்பாறை இருக்கிறது;இங்கிருந்து சதுரகிரிக்கு 1970 வரை குகை வழியாக பயணித்திருக்கின்றனர்;
சுடுகாட்டுடன் கூடிய ஜீவசமாதிகள் அமைந்திருப்பது ஸ்ரீவில்லிபுத்தூரில் மட்டுமே! ஆமாம்! ஸ்ரீவில்லிபுத்தூர் சிவகாசி சாலையில் பணியாரத் தோப்புக்கு எதிரே கண்மாய்க் கரை வழியாக சென்றால் சுடுகாடும்,அத்துடன் கூடிய மூவர் சமாதியும் இங்கே தான் அமைந்திருக்கின்றன;மாணிக்கம் சுவாமிகள்,முனியப்ப சுவாமிகள் மற்றும் ஒரு சுவாமிகள் ஜீவசமாதி அடைந்திருப்பது இங்கே மட்டுமே! ஸ்ரீவில்லிபுத்தூர் கீழப்பட்டி சாலியர் சமுதாயத்திற்கு சொந்தமான இந்த இடத்தில் 1970 வரை இந்த மகான் கள் வாழ்ந்து வந்து சிவநெறியைப் பரப்பியுள்ளனர்;
பணியாரத் தோப்பு பகுதியில் இருந்துதான் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்குரிய கோபுரம் கட்ட ஆரம்பித்தனர்;இங்கிருந்து சாரம் வழியாக ஏறி கோபுர கட்டுமான வேலை நடைபெறும் இடத்திற்குச் சென்று ஒரு செங்கலைக் கொடுத்துவிட்டு வந்தால் ,சம்பளமாக ஒரு பணியாரம் வழங்கப்படும்;அது ஒருவேளை உணவுக்கு ஈடானது;
கோட்டாங்கரை,கோட்டைத்தலைவாசல் என்று இரு இடங்கள் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருக்கின்றன;கோட்டாங்கரை வரை ஸ்ரீவில்லிபுத்தூர் கோட்டை அமைந்திருந்தன;புலித்தேவன் மன்னர் இந்த கோட்டையை இடித்துத் தரைமட்டமாக்கினார்;அப்போது இருந்த முகமது சாகிப் என்ற ஜமீனும்,ஸ்ரீவில்லிபுத்தூர் ஜமீனும் ஆங்கிலேயனுக்கு ஆதரவாக இருந்ததால் இந்தக்கோட்டையை இடித்தார்;

தமிழ்நாடு அரசாங்கத்தின் சின்னமாக விளங்குவது ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ராஜகோபுரமே! 192 அடி உயரமாக இருக்கின்றது;முற்காலத்தில் 1960களில் கர்மவீரர் காமராஜர் இங்கிருந்து எம்.எல்.ஏ,ஆகித்தான் முதலமைச்சர் ஆனாராம்;

Leave a Reply