​ஸ்டீவ் ஜாப்ஸ் சொன்ன கடைசி அறிவுரை இதுதான்!

2011- ல் ஆப்பிள் நிறுவனத்தின் சி.இ.ஓ.,வாக பொறுப்பேற்றதில் இருந்து டிம் குக் அடிக்கடி ஒரு விஷயத்தை தனது பேட்டிகளில் பதிவு செய்து கொண்டே வருவார். ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ், டிம் குக்கிற்கு இறுதியாக தந்த அட்வைஸ்தான் அது! என்ன தெரியுமா?

“உனக்கு எது சரியெனப் படுகிறதோ, அதையே செய்” – இதுதான் அந்த வார்த்தைகள். இதனை அடிக்கடி நினைவுகூறும் டிம் குக், வாஷிங்க்டன் போஸ்ட் பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில் அது பற்றி இன்னும் மனம் திறந்துள்ளார்.
“ஜாப்ஸ் எனக்கு அளித்துள்ள மிகப்பெரிய பரிசு அவரின் அறிவுரைதான். “நீ நீயாக இரு..நீ நீயாக மட்டுமே இரு” என அவர் சொன்ன வார்த்தைகள்தான் என்னுடைய மிகப்பெரிய பரிசு.  ஜாப்ஸ் உடன் என்னை ஒப்பிட்டு, நான் எப்படி ஆப்பிளை வழி நடத்தப்போகிறேன் என பலரும் சந்தேகப்பட்டனர். ஆப்பிள் நிறுவனத்தின் நிறுவனர் அவர்தான். அத்துடன் முற்போக்காக சிந்திப்பதில் அவர், நவீன கால எடிசன் அல்லது நிகழ்கால டாவின்சி எனலாம். அவர் அளவுக்கு செயல்பட நானும் முயற்சிக்கறேன்” எனப் பேசியிருக்கிறார் குக்.
ஆனால் உலகில் ‘ஆப்பிள்’ இருக்கும் வரை, அதன் தலைவர்களை ஸ்டீவ் ஜாப்ஸ்- உடன் ஒப்பிடுவதை, இனி யாருமே நிறுத்தப்போவதில்லை. இந்த ஒப்பீடுகள் தவிர்க்கவே முடியாது. ஆனால் குக், குக்காகவே இருப்பதில்தான் இருக்கிறது அவரின் வெற்றி!

– செ.ஜெ.பச்சமுத்து

(மாணவப் பத்திரிகையாளர்)

Leave a Reply