​ராம ராஜ்யம்

​ராம ராஜ்யம் என்பது ?……
எறும்பு முதல் யானை வரை எல்லா உயிர்களுக்கும் ,

பாதுகாப்பு கொடுக்கும் வல்லமையும் வள்ளன்மையும்

படைத்தவன் இராமன்.
முறையாக அரசு செய்யும் மன்னவனை மக்கள் கடவுளாகக் கும்பிடுவார்கள் என்று வள்ளுவன் சொல்கிறான்:
முறை செய்து காப்பாற்றும் மன்னவன், மக்கட்கு

இறை என்று வைக்கப் படும் (குறள் 388)

                                                     – என்பது வள்ளுவன் வாக்கு.
“ ராமன்  வனவாசம் சென்றபோது , 

ஒரு நாள் தனது வில்லையும் அம்பையும் தரையில் நிறுத்திவிட்டு,நீர் அருந்த தடாகத்தில் இறங்கினார். 

மேலே ஏறி வந்து பார்க்கையில் 

தமது வில் ஒரு தவளையை ஊடுருவிச் சென்றதன் காரணமாக அந்தத் தவளை இரத்ததில் தோய்ந்திருப்பதைக் கண்டார்.
“ஒரு குரல் கொடுத்திருந்தால்

ஒரு கொலை நிகழ்ந்திராதே!”

மறுகிய மனத்துடன் ராமன்,

மரணம் தழுவும் தவளையிடம்

மனம் வருந்திக் கேட்க
ராமா ! எனக்கு ஆபத்து நேரும்போது,

 “ராமா என்னைக் காப்பாற்று” என்று சொல்வேன். 

ஆனால் நீயே என்னைக் கொல்லும்போது, 

நான் யாரிடம் என் குறையைச் சொல்லி முறையிட்டுப் பிரார்த்திப்பது? என்று தவளை பதில் சொல்லிற்று”.
 ராமகிருஷ்ண பரமஹம்சர் சொன்ன கதை இது

Leave a Reply