​பனை தென்னை

பனைக்கும் தென்னைக்கும் வித்தியாசம் வேறு வேறு….பனை மூலம் கிடைக்கும் பதநீர், கருப்பட்டி, பனை கற்கண்டு, நுங்கு,  பனை பழம், கிழங்கு, பனை ஓலை பொருட்கள், பழங்கால காகிதமான எழுதும் பனை ஓலை, தும்பு, இரும்பு வேலி போன்று அமையும் மட்டை, ஓலையில் கூரை வேயலாம், 100 வருடம் நின்றாலும்…அதை வெட்டி மரத்தை பிளந்து கூரை அமைத்தாலும் 100 ஆண்டு ஆயுள் கொண்ட மரம், மண் அறிப்பை, நீர் ஆதாரத்தை காப்பது என பல நல்ல விசயம் உள்ளது….கள் உட்பட பல.
தென்னை ஓரு வளர்ப்பு மரம்…பிராய்லர் கோழிப் போல்…நீர் இல்லை தலை சாய்ந்து விடும்….பனை அப்படி அல்ல காட்டுக் கோழி போன்றது…தென்னையில் தேங்காய் தவிர மட்டையில் கயிறு, ஓலையில் கீத்து, மரம் காலவாய்க்குமே….பிறகு கள்….தென்னை கள்,அந்த வடியும் நீர் கள்ளை தவிர வேறு எதற்கு பயன் இல்லை….அதுவும் வருடம் முழுவதும் வடியும்…..தேங்காய் உணவு சம்மந்தப் பட்டது….தேங்காய் பால் பவுடர்….பதப்படுத்திய தேங்காய் பூ, தேங்காய் எண்ணை என சேமிக்கும் முறை வந்து விட்டது…..பதநீருக்கு எந்த விஞ்ஞான முயற்சியும் இல்லை….ஏன் தென்னை பின் முதலாளிகள்…பனைக்கு பின் ஏழை தொழிலாளிகளே….பனை தோப்பு என எந்த முதலாளியும் வைத்துக் கொள்ளவில்லை.
தென்னை மர கள்ளில் சிலர் ஆர்வம் காட்ட அதன் தோட்ட முதலாளிகளின் கொள்ளை லாபமே…. சம்பாதிக்க….மக்களின் தேங்காய் பற்றா குறையால் தேங்காய், தேங்காய் எண்ணை விலையும் ஏறும்…அதனால் மக்களுக்கு பாதிப்பு….
தென்னங் கள் வருடம் முழுவதும் வந்தாலும் பனை கள் 6 மாதம் வந்தாலும் கலப்பட கள்ளால் மக்கள் ஆரோக்கியம் பாழாகும் உறுதி…தமிழகம் முழுவதும் சப்ளை ஆகும் அளவில் கள்  வாய்பில்லை….தொழிலாளரும் இல்லை….நெல் விவசாயிகள் எப்படி அரசு கட்டுப்பாட்டு விலைக்கு மேல் நஷ்டம் வந்தாலும் விற்க முடியாது….தென்னை விவசாயிகளும் கொள்ளை லாபத்தை மறந்து நியாய விலையில் லாபம் அடைய பழகிக் கொள்ள வேண்டும்…..விலைக்கு அரசிடம் போராட வேண்டும்….ஓரு காலத்தில் சினிமா தயாரிப்பு மற்றும் பைனான்ஸியர்கள் தென்னம் தோப்பு அ்திபர்களாகவே இருந்தனர்….அதை நோக்கியதே தற்போதைய தென்னங் கள் போராட்டம்….இது பனைக்கான போராட்டம் அல்ல என்பதை அறிய வேண்டும்.
நன்றி Babugee Nadar

Leave a Reply