​தேவிகுளம் – கேரளாவின் பிரசித்திபெற்ற மலைவாசஸ்தலத்துக்கு போலாமா

💒💒💒💒💒💒💒💒💒💒💒
கேரளாவின் பிரசித்திபெற்ற மலைவாசஸ்தலமான தேவிகுளம், களகளவென்று ஓசையெழுப்பி குன்றுகளின் உச்சியிலிருந்து ஆர்ப்பரித்து கொட்டும் அருவிகளும், அவற்றை சூழ்ந்து பச்சை கம்பளம் விரித்தது போல காட்சியளிக்கும் பசும்புல் நிலங்களும் புடைசூழ சுற்றுலாப் பயணிகளின் சொர்க்க பூமியாக திகழ்ந்து வருகிறது. இந்த அழகிய நகரம் மூணார் மலை பிரதேசத்திலிருந்து 7 கிலோமீட்டர் தொலைவில் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ளது.

இந்த இடத்துக்கு ஒரு சுற்றுலா செல்வோமா?

தேவிகுளம்…….

 

தேவிகுளம் மலை பகுதிகளில் காணப்படும் பல்வேறு வகையான தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் குறித்து அறிந்துகொள்ளும் ஆர்வத்துடன் இங்கு ஏராளமான இயற்கை காதலர்கள் வந்து செல்கின்றனர். அதுமட்டுமல்லாமல் சிவப்பு பசை மரங்கள் நிறைந்த தோட்டங்களின் நடுவே நடைபயணம் செல்லும் அனுபவம் மிகவும் அலாதியானது.

ஏரிகள் அருவிகள்

 

தேவிகுளத்தின் முக்கிய சுற்றுலாப் பகுதியான சீதா தேவி ஏரியில் பயனிகள் கூட்டத்தை அதிக அளவில் பார்க்கலாம். இந்த ஏரியில் இராமபிரானின் மனைவி சீதாதேவி நீராடியதாக புராணச் செய்தி கூறுகிறது. மேலும் தேவிகுளம் வரும் பயணிகள் பள்ளிவாசல் அருவி, மூணார் மலை பிரதேசத்துக்கும் சென்று வரலாம்.

தேவிகுளம் ஆண்டு முழுவதும் இதமான வெப்பநிலையை கொண்டிருப்பதால் நீங்கள் எந்த பருவ காலங்களிலும் இந்த அழகிய மலை பகுதிக்கு சுற்றுலா வரலாம். எனினும் பனிக் காலத்தில் வெப்பநிலை கணிசமாக குறைந்து காணப்படுவதால் கோடை மற்றும் மழைக் காலங்கள் தேவிகுளம் பகுதியை சுற்றிப் பார்க்க சிறந்த பருவங்களாகும்.
 

மட்டுப்பெட்டி ஏரி…..

 

தேவிகுளம் மலை பகுதிகளின் இடுக்கி குன்றுகளில் கடல் மட்டத்திலிருந்து 1700 மீட்டர் உயரத்தில் அமைந்திருக்கும் மட்டுப்பெட்டி ஏரி அமைதியான சுற்றுலாத் தலமாக காட்சியளித்துக் கொண்டிருக்கிறது. இந்த ஏரியின் குறுக்கே 1940-ஆம் ஆண்டு கட்டப்பட்ட மட்டுப்பெட்டி அணை பிரபலமான சுற்றுலாத் தலமாக திகழ்ந்து வருகிறது.

 

சீதா தேவி
தேவிகுளம் வரும் சுற்றுலாப் பயணிகள் கண்டிப்பாக தேவிகுளம் ஏரி என்று பிரபலமாக அறியப்படும் சீதா தேவி ஏரியை தவற விட்டுவிடக் கூடாது. இதன் தாதுப் பொருட்கள் நிறைந்த நீரில் நோய் தீர்க்கும் தன்மை உள்ளதாக கருதப்படுகிறது. அதோடு இந்த ஏரிப்பகுதியில் காணப்படும் வெப்ப நீரூற்று தனிமையை விரும்பிகளை வெகுவாக ஈர்த்து வருகிறது.

 

தேவிகுளம் சுற்றுலாப் பயணிகளின் சொர்க்க பூமியாக திகழ்ந்து வருவதற்கு அதன் தேயிலை மற்றும் ஸ்பைஸ் தோட்டங்கள்தான் முக்கிய காரணம். இங்கு பல்வேறு வகையான தாவரங்களையும், விலங்கினங்களையும் பயணிகள் கண்டு ரசிக்கலாம். அதோடு பல ஏக்கர் பரப்பளவை கொண்ட இந்தத் தோட்டம் எண்ணற்ற கவர்ச்சிகரமான மரங்களால் இயற்கையாக அலங்கரிக்கப்பட்டுள்ளது

தூவானம் அருவி
மரயூரிலிருந்து 18 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சின்னார் வனவிலங்கு சரணாலயத்தில் இந்த தூவானம் அருவி அமைந்திருக்கிறது. இந்த அருவி சின்னார் சரணாலயத்திற்கு கிழக்கு பக்கம்

ஓடிக் கொண்டிருக்கும் பாம்பார் நதியிலிருந்து உற்பத்தியாகிறது.

2 comments

  1. காமராசரால் கேரளாவுக்கு தூக்கி கொடுக்கப்பட்டது தேவிகுளம் பீர்மேடு ஆகிய எம் தமிழ் நிலங்கள்

Leave a Reply to admin Cancel reply