​திருட்டு விசிடியில் படம் பார்த்தால் எங்க வங்கி கணக்கில் பணம் போடுங்க: ஜோக்கர் படக்குழு 

திருட்டு விசிடியில் படம் பார்த்தால் எங்க வங்கி கணக்கில் பணம் போடுங்க: ஜோக்கர் படக்குழு
#JokerTeam

சென்னை: திருட்டு விசிடி மற்றும் இன்டர்நெட்டில் டவுன்லோடு செய்து படம் பார்ப்பவர்கள் அதற்கான தொகையை தங்களின் வங்கிக் கணக்கில் செலுத்துமாறு ஜோக்கர் படக்குழுவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திரையுலகினர் ஒரு படத்தை எடுத்து முடித்து அதை ரிலீஸ் செய்வதற்குள் படாதபாடு படுகிறார்கள். இந்நிலையில் அதிநவீன தொழில்நுட்பத்தின் உதவியால் படம் ரிலீஸான அன்றே திருட்டு விசிடி வெளிவந்துவிடுகிறது.

இது தவிர இணையதளங்களிலும் படம் வெளியாகி அதை டவுன்லோடு செய்து வீட்டில் இருந்தபடி ஹாயாக படம் பார்த்து படக்குழுவினர் வயிற்றில் அடிக்கிறார்கள்.

ஜோக்கர்
ராஜுமுருகன் இயக்கத்தில் வெளியான ஜோக்கர் அரசியல் சாட்டையடியாக அமைந்துள்ளது. நல்ல படம் பார்க்க வேண்டுமானால் ஜோக்கர் படத்தை பாருங்கள் என்று தியேட்டர்களில் படம் பார்த்தவர்களே தெரிவித்துள்ளனர்.

திருட்டு விசிடி

ஜோக்கர் குழு திருட்டு விசிடிக்கள் மற்றும் இணையதளத்தில் டவுன்லோடு செய்து படம் பார்ப்பவர்களை வித்தியாசமான முறையில் அணுகி அறிக்கை வெளியிட்டுள்ளது.

அறிக்கை
தோழர்களே! திருட்டி விசிடியில், இணைய தரவிறக்கத்தில் படம் பார்ப்பதும் ஊழலின்- சுரண்டலின் இன்னொரு அங்கம் தான். ஒரு சினிமா பலநூறு தொழிலாளர்களின் வியர்வை, சில வருட உழைப்பு, இதையும் தாண்டி திருட்டு விசிடியில் படம் பார்க்கும் தோழர்கள் அதற்கான நியாயமான தொகையை கீழ்க் கண்ட வங்கி கணக்கில் செலுத்திவிடுங்கள்.

THIS IS MY ORDER

A/C Name: DREAM WARRIOR PICTURES

A/C NO: 4211747273 IFSC CODE: KKBK0000462

( நீங்கள் அனுப்புகிற பணம் இந்த தேசத்தில் கழிவறை இல்லாத குடிமக்களுக்கு கழிவறை கட்டித்தர பயன்படுத்தப்படும்)

தங்கள் உண்மையுள்ள

மக்கள் ஜனாதிபதி

வித்தியாசம்

ஜோக்கர் படம் மட்டும் வித்தியாசமாக இல்லை. அவர்களின் அறிக்கையும் வித்தியாசமாக உள்ளது. அவர்களின் முயற்சி வெற்றி பெற நாமும் வாழ்த்துவோம்.

Leave a Reply