​தடகளவீரர்கள் ஒலிம்பிக்ல வாங்குற தங்க பதக்கங்களை கடிக்கிறாங்களே ஏன்னு தெரியுமா

தடகளவீரர்கள் ஒலிம்பிக்ல வாங்குற தங்க பதக்கங்களை கடிக்கிறாங்களே ஏன்னு தெரியுமா? காரணம் தெரிஞ்சா நீங்களே எரிச்சல‌டைவீர்கள்!

நீங்க எல்லாருமே பார்த்திருப்பீர்கள், ஒலிம்பிக்ல ஜெயிச்சு தங்கப்பதக்கம் வாங்குற பெரும்பாலான வீரர்களைப் பார்த்தால் தங்களோட பதக்கத்தை வாயில வைச்சு கடிச்சிட்டு இருப்பாங்க இந்த மாதிரி…..
இதற்கான காரணம் என்னனு எப்பவாவது நீங்க யோசிச்சு பார்த்திருக்கிங்களா?..

உண்மையில் இது சும்மா எல்லாரும் பார்க்கனும் அப்படி என்பதற்காக அல்ல.. முன் காலங்களில் இது ஒரு பழக்கமாக இருந்தது அது இப்போ அப்படியே பின்பற்றப்பட்டு வரப்படுகிறது ஆனால் இதற்கு பின்னால ஒரு காரணம் இருக்கிறது.

முன்காலங்களில் வீரர்களுக்கு கொடுக்கப்படும் தங்கம் சுத்தமான முழு தங்கம் வெறும் தங்கப்பூச்சு அல்ல. அதனால் தங்கம் உண்மையிலேயே சுத்தமான தங்கம்தானா என்று சோதிக்கதான் வீரர்கள் அதை கடித்து பார்த்தார்கள். தங்கம் மிகவும் மென்மையான உலோகம் கடித்தால் பற்தடம் அதில் அப்படியே பதியும். அதனால்தான் வீரர்கள் அப்படி கடித்து பார்த்து உண்மையான தங்கம்தானானு உறுதிப்படுத்திக்கிட்டாங்க.
காலப்போக்கில் ஒரு மரபாக ஆகிவிட்டது. இந்தக் காலங்களில் தங்க முலாம் பூசப்பட்ட பதக்கங்களே கொடுக்கப்படுகின்றன, கடித்தாலும் பற்தடம் அதில் விழாது. விளையாட்டு வீரர்களுக்கும் இது‌ தெரியும் இருந்தாலும் ஒரு பாணியாக அந்தப் பழக்கத்தை வீரர்கள் பின்பற்றி வருகின்றனர்.

ஆச்சரியமான விசயம்தான். இல்லயா??

Leave a Reply