​கூட்டு குடும்பம் 

​கூட்டு குடும்பம் சொர்க்கம். ஏன்?

……….

மகளை கொஞ்சும் போது குத்தக் கூடாது என்பதற்காக தினமும் சவரம் செய்வது தந்தையின் பாசம்.
மகளுக்கு குடையாக வேண்டும் என்றே சேலை முந்தானையை பெரிதாக விட்டு சேலை கட்டுவது அன்னையின் பாசம்.
பேத்திக்கு தொட்டில் கட்ட வேண்டும் என்றே தன் மணநாள் பட்டுச் சேலையை பத்திரப்படுத்துவது பாட்டியின் பாசம்.
பேரனுக்கு தும்மல் வந்து விடும் என்று அவனைக் கண்டதும் மூக்குப் பொடியை ஒளித்து வைப்பது தாத்தாவின் பாசம்.
தங்கைக்காக எதையும் விட்டுகொடுப்பது அண்ணனின் பாசம்.
அண்ணனின் தவறுக்கு தாயியிடம் திட்டு வாங்குவது தங்கையின் பாசம்.
தனக்கு பிடித்ததை தன் தம்பிக்கு கொடுத்து அழகு பார்ப்பது அக்காவின் பாசம்.
வாழ்க்கையை சொர்க்கமாக வாழக் கூடுக்குடும்பமே சிறந்தது……….!
அதனால் தான் தமிழர்கள் கூட்டுகுடும்ப வாழ்க்கையை பெரிதும் போற்றிப் பேணிக்காத்தனர்.

Leave a Reply