​உலகின் சில அழகிய இடங்களைப்பற்றி தெரிஞ்சுக்கலாம் வாங்க..

🌵🌵🌵🌵🌵🌵🌵🌵🌵

மூங்கில் காடுகள்  – ஜப்பான் 
தொடர்ந்து பல கிலோ மீட்டர்கள் தூரம் மூங்கில் காடுகள் நடுவே நடந்து போயிருக்கிங்களா ?  அப்படி ஒரு இடம் நம்ம ஜப்பான்ல இருக்காம் . “சகானோ” எனப்படும் மூங்கில் காடுகள் ஜப்பானின் க்யோடோ பள்ளத்தாக்கு பகுதியில் அமைத்துள்ளது. இதன் பரப்பளவு சுமார் 16 கிலோ மீட்டர்கள். இதனுடைய அழகே காற்றுக்கு அந்த மரங்கள் எழுப்புற சத்தம் தானம்.

கருப்பு காடுகள் – ஜெர்மனி

 ஜெர்மனியின் மிக முக்கியமான சுற்றுலா தளங்களில் ஒன்று இந்த கருப்பு காடு. இங்கு உள்ள  கூம்பு மரங்கள் மிக அடர்த்தியாக  வளர்ந்துள்ளதால் சூரிய ஒளி காடுகளின் உள்ளே புகுவது இல்லை. இதன் நீளம் சுமார் 200 கிலோ மீட்டர்கள் ஆகும் . 

கனோலா மலர் தோட்டம் – சீனா 

கண்ணுக்கு எட்டின தூரம் வரை மஞ்சள் நிற மலர்களுடன் மிளிருகிறது இந்த கனோலா மலர் தோட்டம். இந்த மஞ்சள் நிற பூக்கள் வேற எதுவும் இல்ல , நம்ம கடுகு செடியின் பூ தானாம். இதன் அழகின் காரணாமாக நிறைய ஷூட்டிங் இங்க எடுகப்படுகிரதாம். இதன் சீசன் காலம் பிப்ரவரி முதல் மார்ச் வரையில் தானாம். 

லாவெண்டர் மலர் தோட்டம் – பிரான்ஸ்

லாவெண்டர் மலர் தோட்டத்தினை நிறைய பாடலில் பாத்திருப்போம். இந்த தோட்டம் அழகிற்காக மட்டும் இல்லாம இங்க கிடைக்குற லாவெண்டர் மலர்களைக்கொண்டு பூச்சிக்கடி மற்றும் தீக்காயங்களுக்கு மருந்து தயாரிக்கப் பயன்படுதுகிரார்களாம்.

காதல் சுரங்கப்பாதை – உக்ரைன்

பெயரை கேட்டதும் எதோ சினிமா படப்பெயர் மாதுரி தோன்றும். ஒரு பழங்கால ரயில் வழித்தடம் முழுவதும் பெரிய பெரிய மரங்கள் சூழ்ந்து ஒரு சுரங்கப்பாதை போன்று தோற்றம் அளிக்கின்றது . பல்வேறு வெளிநாடுகளிலும் இருந்து நிறைய காதல் ஜோடிகள் இங்கே சுற்றிப்பார்க்க வருவதனால இதனை “காதல் சுரங்கப்பாதை” என்றும் அழைக்கின்றனர்.

Leave a Reply