வெளிநாட்டு வாழ்க்கை சாதனையே 

​வெளிநாட்டு வாழ்க்கை வேதனையே ..என்ற கவலைக்கு மத்தியில் வெளிநாட்டு வாழ்க்கை சாதனையே ..என்று சொல்லும் கவிதை இது.
தெரியாத ஊர் , அறியாத மொழி ,புதிதான சூழல், புரியாத சுற்றம் அனைத்தும் தாண்டி நாம் அன்றாடம் வாழ்ந்து கொண்டு இருக்கிறோமே..

நாம் வாழ தகுதியானவர்கள் மட்டும் அல்ல பிறருக்கு வாழ்கையை கற்று கொடுக்கவும் தகுதியானவர்கள்.
இங்கே நாம் முடிந்தால் சாப்பிடுவோமே தவிர மூன்று வேளையும் சாப்பிடுவதில்லை,

முடி வெட்டினால் கூட ஒட்ட வெட்டுவோமே தவிர

ஒரு போதும் விட்டு வெட்டியது கிடையாது,

இது எங்களின் கஞ்சத்தனம்அல்ல, நாங்கள் அசிங்கமானாலும் எங்கள் குடும்பம் அழகாக இருக்க வேண்டுமே என்ற

அபூர்வ குணமே.
எங்களின் ஒழுகிய குடிசைகள் ஓடானது

கிழிந்த உடைகள் சீரானது

எங்களின் அக்காவுக்கும் தங்கைக்கும் கல்யாண

பத்திரிக்கையையே இந்த திர்ஹம்சும், ரியாலும் அனுப்பியதும் தானே அச்சானது…
இங்கே சைவம், அசைவம் கிடையாது அய்யர் என்னோடு ஆட்டு கறி சாப்பிடுகிறார்.

இங்கே சாதி மதம் தடுக்காது முருகன், முகமதுவை மச்சான் என்று கூப்பிடுகிறார்.

இங்கே கலவரம் கிடையாது கர்நாடக காரர் கூட என்னோடு தண்ணீர் வேணுமா என்று கேட்கிறார்.

இங்கே பயங்கரவாதம் கிடையாது .பக்கத்து அறையில் உள்ள பாகிஸ்தான் நபர் என்னோடு நண்பனாக பழகுகிறார்.

இதன் மூலம் நாங்கள் உள்ளூர் ஒற்றுமையை மட்டும் அல்ல, உலக ஒற்றுமையையும் காக்கிறோம் என்று உரக்க சொல்லிகொள்கிறேன்.
வீட்டில் விஷேசமோ, நாட்டில் பண்டிகையோ, உற்சாகத்தை அடக்கினோம்,

வீட்டில் கெட்டதோ, வீதியில் நல்லதோ, உணர்வுகளை அடக்கினோம்.

ஆங்காங்கே ஐஸ்வர்யாய் ராய்கள் எங்கள் முன்னால் அலைகின்ற போதும் எங்கள் ஆண்மையை அடக்கினோம்,

எத்தனையோ அப்பாக்களை தங்கள் குழந்தைகள் அங்கிள் என்று அழைக்கின்ற போது வந்த அழுகையை அடக்கினோம்,

ஆக ஆசிரமங்களில் எல்லாம் சாமியார்கள் அக்கிரமங்களை அரங்கேற்றும் போது, ஐம் புலன்களையும் அடக்கி ஆள்வது அயல் நாட்டில் வாழும் நாங்கள் மட்டும் தானே…
என் பெயர் விளக்கு என்றாலும் நான் வெளிச்சம் தந்தால் தான் விசா அடிப்பார்கள்.

என் பெயர் ஆரோக்கியம் என்றாலும் நான் ஆரோக்கியமாக இருந்தால் தான் இங்கு இக்காமா அடிப்பார்கள்.

என் பெயர் நல்லவன் என்றாலும் என் மீது வழக்கு இல்லை என்றால் தான் என்னை வழி அனுப்பியே வைப்பார்கள்.

ஆக நாங்கள் திடம் வாய்ந்தவர்கள் மட்டும் அல்ல உலகில் எங்கும் வாழ தரம் வாய்ந்தவர்களும் கூட
வியர்வை சிந்திய காசு வெளியில் நின்று ஒரு சிகரெட் பிடித்தால் பந்தா பண்ணுகிறான் என்கிறான் என் பக்கத்து வீட்டுக்காரன்..

அழுது முடித்து ,அனுப்பிய சேலை உடுத்தி என் மனைவி ஊரில் நடந்தால் பகட்டாக திரிகிறாள் என்கிறான் பங்காளி வீட்டுக்காரன்..

குப்பபூசை தின்று கொடுத்து விட்ட பணம் குடி இருக்க ஒரு குட்டி வீடு வாங்கினால் வெளிநாட்டு பணம் விளையாடுதோ என்கிறான் என் எதிர் வீட்டுக்காரன்.

இப்படி பொழுது போகாத பொறாமை காரர்கள் மத்தியில் பழுது படாமல் இருப்பதால் பொறுமைக்கு எடுத்து காட்டாய் இந்த பொக்கிசங்களை சொல்லலாமே ,….
பூவையர்க்கு பிரசவம் வலியை தந்தது பொருத்து கொண்டோம் ஏனென்றால் அது தானே நமக்கு வாரிசையும் தந்தது,

அது போலே வெளிநாட்டு வாழ்க்கை

சில பிரிவை தந்தாலும் பொருத்து கொள்வோம் ஏனென்றால் அது தானே நமக்கு பிழைப்பையும் ,கவுரவத்தையும் தந்திருக்கிறது ….
☺☺😌😌👍

Leave a Reply