வீரப்பன்

கடந்த 2000 ம் ஆண்டு ஓசூரில் செய்தியாளர் பணி. ஜூலை 30. கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமாரை வீரப்பன் குழு கடத்திவிட்டது என்று தகவல் .

கடத்தப்பட்ட தகவலை ஒரு சோர்ஸ் மூலம் உறுதி செய்து, வீரப்பன் என்ன டிமாண்ட் வைக்கப்போகிறார் என்று அந்த சோர்ஸிடமே கேட்டேன். காவிரில தண்ணி திறந்துவிடனும், காவிரி விவகாரத்தில் தமிழ்நாட்டுக்கு நீதி வேண்டும் அப்படிங்கிறது வீரப்பனின் முக்கிய கோரிக்கை என்று சொல்லிவிட்டு அந்த சோர்ஸ் தொடர்பைத் துண்டித்துக்கொண்டது.

அடுத்த சில மணி நேரங்களில் அதே கோரிக்கையை வீரப்பன் தரப்பு முன்வைத்தது எனது சோர்ஸ் தகவலை உறுதி செய்தது.

108 நாட்கள் கன்னட சூப்பர் ஸ்டாரை காட்டுக்குள் வைத்து இருந்தார் வீரப்பன்.

வீரப்பன் செய்தது சட்ட விரோதம்தான் என்பதில் மாற்றுக் கருத்துக் கிடையாது. ஆனால், வீரப்பன் தனிமனிதராக ஒரு மாநிலத்தின் சூப்பர் ஸ்டாரை கடத்திவைத்துக்கொண்டு தனது மாநிலத்தின் மக்களுக்காக நீதி கேட்கும் வரையிலும், அதன் பிறகு இன்றும்கூட காவிரியை பகிர்வதில் சுமூக உடன்பாடு எட்டப்பட முடியாமல் இருப்பது தமிழ்நாட்டு ஆண்ட, ஆளும் அரசுகளின் ராஜதந்திரத் தோல்வி, இயலாமை என்பதைத்தவிர வேறு ஒன்றும் இல்லை.

Leave a Reply