விவசாய பொருட்களை ஏற்றுமதி செய்வது எப்படி

மத்திய அரசால் 1986-ம் தொடங்கப்பட்ட “விவசாய மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவி பொருட்கள் ஏற்றுமதி அமைப்பு” (APEDA The Agricultural and processed food products export development Authority ” என்ற ஒன்றே இருப்பது நமது மக்கள் பலருக்கு தெரியாமல் போய்விட்டது. உற்று கவனித்து இருந்தால், கருப்பு வெள்ளை விளம்பரமாக தினசரி செய்திதாள்களின் ஏதவாது ஒரு மூலையில் இதை பற்றிய செய்தி இருக்கும்.

தங்கள் பொருள்களை ஏற்றுமதி செய்ய விரும்புவோர் தங்கள் வைத்துள்ள பொருட்களை பற்றிய தகவல்களை இங்கு பதிவு செய்து வைத்துகொள்ள வேண்டும். பதிவு செய்யப்பட்ட பொருள்களுக்கான தேவையோடு ஏதவாது வெளிநாட்டு நிறுவனங்கள் இவர்களை தொடர்பு கொண்டால் ,இவர்கள் நம்மை தொடர்புகொண்டு வைத்துள்ள பொருள், அளவு ,தரம் போன்றவற்றை பரிசோதித்து ,பிறகு பொருள்களை ஏற்றுமதி செய்யவும் உதவி செய்வார்கள். ஏற்றுமதிக்கு புதிதாக உள்ள நபர்களுக்கு அவர்களை ஊக்குவிக்கும்படியாக மானிய தொகைகளும் வழங்கபடுகிறது.காய்கறி,பழங்கள் ,பூக்கள்,பதபடுதபட்ட பழச்சாறுகள்,அரிசி,கோதுமை,நிலகடலை,வெல்லம், பால் பொருட்கள்,தேன் , உலர் பழங்கள் போன்றவைகளின் தேவைகள் எந்தெந்த நாடுகளில் உள்ளது போன்ற தகவல்களை இந்த அலுவலகத்தை அணுகி தகவல் பெறலாம்.

இதன் அலுவலகங்கள் மும்பை, கொல்கத்தா ,ஐதராபாத்,பெங்களூர் போன்ற இடங்களில் இயங்கி வருகிறது.தமிழ்நாடு,கேரளா மாநில மக்களுக்கு தொடர்புக்கு பெங்களூர் அலுவலகம்

முகவரி

Regional Incharge,
Agriculture and processed food products,
Export development authority,
12/1/1, Palace cross road,

bangalore – 560 020

Telephone : 080-23343425

080-23368272

ஏற்றுமதி தொடர்பான அனைத்து தகவல்களையும் மேல் சொன்ன தொலைபேசி என்னை தொடர்பு கொண்டு பெறலாம்.

Leave a Reply