விநாயகரின் முன்னிலையில் முன் தலையில் குட்டிக் கொள்வது ஏன்?

தலையில் குட்டிக் கொள்ளும் இடத்தில் முன் தலையின் இருபுறங்களிலும் TEMPLAR LOBE உள்ளது. இந்த இடத்தில் தான் ஞாபக சக்தியைத் தூண்டும் நாடிகள் அமைந்துள்ளன. இந்த இடத்தில் குட்டிக் கொள்வதால் இந்த நாடிகள் தூண்டிவிடப்படுகின்றன. இதனால் உடம்பில் சுறுசுறுப்பும், உள் எழுச்சியும் உண்டாகிறது. இதனை மனதில் கொண்டு முன் காலத்தில் ஆசிரியர்கள் மாணவர்களின் முன் தலையில் குட்டி தண்டிப்பது வழக்கம். நெற்றிப் பொட்டில் குட்டிக் கொள்ளும்போது அங்கே உள்ளடங்கி இருக்கும் அமிர்த கலசம் லேசாக திறந்து அதில் உள்ள அமிர்தம் உடல் முழுவதும் பரவும் என்று யோகிகள் கூறுவர்.

உச்சந்தலையில் உள்ள அமிருதம் எல்லா நாடிகளிலும் இறங்கிப் பாய்வதாக எண்ணி வலக்கையை இடக்கையின் முன் வைத்து வலக்கையால் இடது முன் தலையிலும், இடது கையால் வலது முன் தலையிலும் முஷ்டிகளால் மெதுவாகக் குட்டிக் கொள்வது முறை.

Leave a Reply