விடுமுறையை குழந்தைகள் பயனுள்ள வகையில் கழிப்பது எப்படி

விடுமுறையை குழந்தைகள் பயனுள்ள வகையில் கழிப்பது எப்படி ….!!!
*தேர்வுகள் முடிந்து நீ….ள கோடை விடுமுறை வந்தாகி விட்டது….
*முன்பெல்லாம் விடுமுறை என்றாலே கிராமங்கள், சொந்த ஊர்களுக்குப் போய் தாத்தா, பாட்டி, உறவுகளோடு உறவாடும் வாய்ப்பு பிள்ளைகளுக்கு வாய்த்தது. 
*அதன்மூலம் நிறைய கற்றுக்கொண்டார்கள். மகிழ்ச்சியாக பொழுதுகளைக் கழித்தார்கள். 
*இன்றைக்கு உள்ள பெரும்பாலான பிள்ளைகளுக்கு அதெல்லாம் வாய்ப்பில்லை. 
*அவசர உலகில் அடுக்கு மாடி வளாகத்திலேயே சுற்றிச்சுற்றி வர வேண்டிய கட்டாய நிலை! வரிசை கட்டி நிற்கின்றன கோடைகாலப் பயிற்சிகள்….
*பள்ளி வகுப்பறை போய் இன்னொரு வகுப்பறை கட்டுப்பாடு. 
*பெற்றோர் இருவரும் வேலைக்குப் போகும்பட்சத்தில் குழந்தைகள் பாடு பரிதாபம் விடுமுறையும் மற்றொரு நாளாகவே கழிந்து விடுகிறது….
*இதனால், ஜாலியாக ஆரம்பிக்கும் விடுமுறை சில நாட்களிலேயே பிள்ளைகளுக்கு  சலிப்பூட்டத் தொடங்கிவிடுகிறது….
*என்ன செய்யலாம்? உற்சாகம் குறையாமல் விடுமுறையை பயனுள்ள வகையில் கழிப்பது எப்படி….
*கிட்டத்தட்ட பத்து மாதங்கள் பள்ளி பாடங்களிலும் தேர்வுகளிலும் கவனம் செலுத்திய குழந்தைகள் சட்டென நிறுத்தும் போது எரிச்சல் எட்டிப் பார்க்கதான் செய்யும். 
*அதனால், அவர்களை வேறு ஆக்கபூர்வமான செயல்களை நோக்கி திருப்ப வேண்டும்..
*சிறு சிறு புத்தகங்கள் வாங்கிக்கொடுத்து நண்பர்களோடு சேர்ந்து படிக்கச் செய்யலாம். 
*வாரம் ஒருமுறை எங்காவது பயனுள்ள இடங்களுக்கு அைழத்துச் செல்லலாம். 
*தாத்தா, பாட்டி வீடுகளுக்குச் செல்ல முடியாத சூழல் இருப்பவர்கள் ஊரிலிருந்து அவர்களை இங்கே வரவழைக்கலாம். 
*இதனால், அவர்களின் அன்பும், பாசமும் குழந்தைகளுக்குக் கிடைக்கும். அவர்கள் சொல்லுகின்ற கதைகள் குழந்தைகளுக்கும் போய்ச் சேரும். இதனால், உறவுகள் மேம்படும்….
*அருகில் வசிக்கும் குழந்தை களைச் சேர்த்து ஒரு டீம் உருவாக்கலாம்.
*வாரத்தில் ஒருநாள் ஒரு குழந்தையின் பெற்றோர் இந்த டீமை வழி நடத்தி வெளியில் அழைத்துச் செல்லலாம்….
*குறிப்பாக, முதியோர் இல்லங்கள், ஆதரவற்றோர் இல்லங்களுக்கு அழைத்துச் சென்று நாடகம், நடனம் போன்ற சிறு நிகழ்ச்சிகளை நடத்தச் செய்து மகிழ்விக்கலாம்….
*இதனால், குழந்தைகளுக்கு வயதானவர்கள் பற்றிய புரிதல் பிறக்கும். கலைகள் மீதான ஆர்வமும் அதிகரிக்கும். குழுவிலுள்ள ஒவ்வொரு குழந்தையும் ஒரு கதையைச் சொல்லி தினமும் விளையாட வைக்கலாம். 
*அருங்காட்சியம், அறிவியல் மையம், நூலகம் என அவ்வப்போது அழைத்துப் போகலாம். 
*குழுவாக இணைந்து வங்கியில் கணக்கு ஆரம்பிப்பது எப்படி? பணம் போடுதல், எடுத்தல் போன்ற தெரியாத விஷயங்களைக் கற்றுக் கொள்ள செய்யலாம்….
*குழுவில் உள்ள குழந்தைகளுக்கு ஏதேனும் மொழி தெரியும் பட்சத்தில் அதனை மற்றக் குழந்தைகள் சேர்ந்து கற்றுக்கொள்ளலாம். 
*பெரியவர்களுக்கே தெரியாத, ஒரு மொபைல் அப்ளிகேஷனை கூட சாதாரணமாக டவுன்லோடு செய்து எளிதாக பயன்படுத்தும் ஆற்றல் இன்றைய குழந்தைகளுக்கு இருக்கிறது…
*ஆனால், தினந்தோறும் பள்ளிக்குச் செல்ல அவர்கள் பயன்படுத்தும் சைக்கிளுக்கு காற்றடிக்கத் தெரிவதில்லை. சைக்கிள் செயின் கழன்றால்கூட அதனை மாட்டத் தெரியாமல் முழிக்கின்றனர். 
*அதையெல்லாம்  கற்றுக் கொடுக்கலாம். அதேபோல், வீட்டில் பல்ப் ஃபியூஸ் போனால் கழற்றி மாட்டப் பழக்கலாம்….
*சமையலில் ஆர்வத்தை ஏற்படுத்தலாம். டீ போடுவது, காய்கறி நறுக்குவது, தோசை சுடுவது எனச் சின்ன சின்ன வேலைகளை கற்றுக் கொடுக்கலாம்…..
*வெஜிடேபிள் சாலட் தயார் செய்யச் சொல்லி அதை அவர்களையே சாப்பிடச் சொல்லலாம். அதனை போட்டோ எடுத்து மற்ற நண்பர்களுக்கு ஷேர் செய்யலாம்….
*இதில், கண்டிப்பு காட்டக் கூடாது. அவர்கள் போக்கிலேயே சென்று கற்றுத் தர வேண்டியது அவசியம்.
*ஒரு பொருளை வாங்கும் முன்பே அது அவசியமா என முடிவெடுக்க கற்றுக்கொடுங்கள்…..
*அவர்களை யோசிக்க வையுங்கள். ஒருவேளை அந்த முடிவு தவறானதாக இருந்தாலும் கவலைபட வேண்டாம். 
*ஏனெனில், தவறிலிருந்தே சரியான பாடத்தை கற்றுக்கொள்ள முடியும். குழந்தைகளுக்கு சின்னதாக வேலைகளைக் கொடுத்துப் பழக்கலாம்…..
*வீட்டை சுத்தம் செய்யச் சொல்லலாம். அதன் அவசியத்தை வலியுறுத்த வேண்டும். துணி வைக்கும் அலமாரியை சுத்தம் செய்து அழகாக்கலாம். புத்தக மேசையை ஒழுங்கு படுத்தலாம்.
*வீட்டிற்கு பெயின்ட் அடிக்கச் சொல்லலாம். மொட்டை மாடியில் தோட்டம் வளர்க்க வைக்கலாம்….
*அதற்கு தினமும் தண்ணீர் தெளிப்பதை வேலையாக்கலாம். கணவன், மனைவி இருவரும் வேலைக்கு செல்பவராக இருந்தால், தங்களின் குழந்தை நலனுக்காக ஒரு பத்து நாட்கள் விடுமுறை எடுப்பது அவசியம்…..
*அப்போதுதான், அவர்களின் வாழ்க்கை மேன்மை அடையும்..!’’
*தாத்தா, பாட்டி வீடுகளுக்குச் செல்ல முடியாத சூழல் இருப்பவர்கள் ஊரிலிருந்து அவர்களை இங்கே வரவழைக்கலாம்….
*இதனால், அவர்களின் அன்பும், பாசமும் குழந்தைகளுக்குக் கிடைக்கும்

Leave a Reply