வாழையுடன் எந்த வகையான பயிர்களை ஊடுபயிராக பயிரிடலாம்

‘அனுபவம் வாய்ந்த விவசாயிகளுக்கு கூட, வாழை பற்றிய சரியான புரிதல் கிடையாது. மற்ற பயிர்களைப் போலவே அதையும் இரண்டு, மூன்று பருவம் முடிந்தவுடன் வெட்டி எறிந்து விடுகிறார்கள். ஆனால், வாழை குடும்பம் ஆயிரம் ஆண்டுகள் வாழக்கூடிய தகுதிப் பெற்றது. வாழை யைத் தனி மரமாகப் பார்க்காமல் குடும்பமாக பாருங்கள். ஒரு குடும்ப வாழைக்கு 64 சதுர அடி நிலம் தேவைப்படும்.

பொதுவாக, 12 X 12 இடைவெளி விட்டு நடப்படும் வாழைத் தோட்டங்களில் பல வகையான ஊடுபயிர்களை பயிரிடலாம். வெங்காயம், தட்டைப் பயறு, சாமந்தி, மிளகாய் போன்றவை பயிரிடலாம். இவை ஊடுபயிராகவும் இருக்கும். பயிருக்கு உயிர்மூடாக்காகவும் அமையும். மேலும் வாழை யுடன் முருங்கை மரமும் பயிரிடலாம். முருங்கையானது காற்றில் உள்ள தழைச்சத்தை இழுத்து பயிருக்குக் கொடுக்கும். வாழையில் இப்படிப்பட்ட பயிர் வகைகளை சாகுபடி செய்தால் கூடுதல் வருமானம் கிடைக்கும்.”

Leave a Reply