வாசனை

பருவக்காலத்திற்கு தகுந்தாற்போன்று மக்களின் சுவாச அனுபவங்களும் மாறுகின்றன.
ஏன் குளிர்காலத்திலும், கோடைக்காலத்திலும் வாசனை வேறுப்படுகிறது?
குளிர்காலத்தில் வாசனை மூலக்கூறுகள் மிகவும் மெதுவாக காற்றில் பரவுவதால் விரைவில் அந்த வாசனையை நம்மால் சுவாசிக்கமுடிவதில்லை. ஆனால் வெப்ப காலங்களில் வாசனை மூலக்கூறுகள் விரைவில் காற்றில் பரவுவதால் நம்மால் சுலபமாக அந்த வாசனையை சுவாசிக்க முடிகிறது. அதனால் வெப்ப காலங்களை விட குளிர்காலங்களில் குறைவான வாசனை வருகிறது என்று பிலடெல்பியாவில் உள்ள மோனல் இரசாயனத் சென்சஸ் மையத்தின் நுகர்வு விஞ்ஞானி பமீலா டால்டன் கூறுகிறார்.


பருவக்காலத்தை பொருத்தே வாசனையை நம்மால் சுவாசிக்க முடிகிறது. குறிப்பாக குளிர்காலங்களில் வாசனை மெதுவாக காற்றில் பரவுவதால் நமது மூக்கு வாசனையை மெதுவாக உணர்கிறது என்று டால்டன் கூறுகிறார்.
மோனல் ஆராய்ச்சியாளர்கள் குளிர்காலங்களில் சுவாசிக்கும் போது ஆழமாக சுவாசித்தால் தான் நாம் வாசனையை உணர முடியும் என்றனர்.
(எ.கா): காபி சூடாக இருக்கும் போது நாம் அதனுடைய வாசனையை விரைவில் உணர முடிகிறது. ஆனால் அந்த காபி குளிர்ந்த தன்மையில் இருக்கும் போது அதனுடைய வாசனையை விரைவில் உணர முடிவதில்லை சற்று ஆழமாக சுவாசித்தால் தான் அதனுடைய வாசனையை நம்மால் உணர முடிகிறது.
குளிர் காற்று எப்போதுமே இதமாக இருக்க கூடும் என்று சிலர் எண்ணுகிறார்கள்.ஆனால் குளிர் காற்று கூட சில சமயங்களில் முப்பெருநரம்புகளை எரிச்சலூட்ட தூண்டுகிறது என்று சிக்காகோவிலுள்ள நரம்பு மற்றும் மனநல மருத்துவர் ஆலன் ஹிர்ஷ் கூறினார்.

Leave a Reply