ராம்மோகன் ராவ் குடும்ப பிண்ணனி

தமிழக அரசின் தலைமைச் செயலர், ராமமோகன ராவின் மருமகள் ஹர்ஷினி, ஆந்திராவைச் சேர்ந்த, முன்னாள் எம்.பி.,யின் குடும்பத்தைச் சேர்ந்தவர்.ஆந்திராவின், பிரகாசம் மாவட்டம், சிங்கராய கொண்டாவைச் சேர்ந்த ராமமோகன ராவ், மறைந்த முன்னாள் எம்.பி.,யும், திருமலை – திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவருமான, ஆதிகேசவலு நாயுடுவின் உறவினர். ஆதிகேசவலு நாயுடுவின் மனைவி, சத்யபிரபா, சித்துார் எம்.எல்.ஏ.,வாக உள்ளார். ஆதிகேசவலு நாயுடுவின் சகோதரர், பத்ரி நாராயணாவின் மகளை, ராமமோகன ராவின் மகன், விவேக் திருமணம் செய்துள்ளார். சித்துார், லட்சுமி நகரில் உள்ள பத்ரி நாராயணா வீட்டில், வருமான வரித் துறையினர், நேற்று சோதனை நடத்தினர்.
இது குறித்து, பத்ரி நாராயணா கூறுகையில், ”இன்று என் பிறந்த நாள். வாழ்த்து சொல்லவே, அவர்கள் வந்தனர்; வேறு ஒன்றுமில்லை,” என்றார்.
80 அதிகாரிகள்: சோதனையில், 80 அதிகாரிகள், 13 குழுக்களாக பிரிந்து செயல்பட்டனர். பெங்களூருவில் உள்ள, விவேக்கின் அலுவலகம் மூடப்பட்டு இருந்ததால், அங்கு வருமான வரித்துறை சோதனை நடத்த முடியவில்லை. அதனால், 12 இடங்களில் மட்டும் சோதனை நடந்தது.தலைமை செயலர் மகன் வாழ்ந்த சொகுசு பங்களா: சென்னை, திருவான்மியூர், ராஜாஜி நகரில், ஒரு சொகுசு பங்களாவில், ராமமோகன ராவின் மகன் விவேக், சில ஆண்டுகளாக வசித்து வருகிறார். அந்த வீடு, பல கோடி ரூபாய் மதிப்புடையது. அவரது வீட்டினுள், நீச்சல் குளம் உட்பட, பல வசதிகள் உள்ளன.
அந்த வீட்டில் நின்றிருந்த காரில், பிரதமர் மோடி சென்னை வந்த போது, அவரை வரவேற்க சென்ற, பொதுத் துறை அனுமதியளித்த, ‘நோட்டீஸ்’ ஒட்டப்பட்டு இருந்தது. வீட்டில் நின்ற, வனத்துறைக்கு சொந்தமான வாகனமும், பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது.

Leave a Reply