ரம்புட்டான் பழம்

ரம்புட்டான் பழம்

பழத்தின் விதையைச் சூழ உட்கொள்ளக் கூடிய சாறு நிறைந்த சதைப்பகுதி காணப்படுவதால் அது மக்களிடையே விரும்பப்படும் பயிராக மாறியுள்ளது. ரம்புட்டான் பழம் மஞ்சள் , சிகப்பு என இரண்டு வகைகளில் உண்டு . முள்கள் போன்று இருக்கும் .
ரம்புட்டான் பழம் சத்து பட்டியல்
உள்ளே தோலை உரித்தால் அதற்குள் சதை பற்றுடன் விதையுடன் இருக்கும் அந்த சதையை சாப்பிட வேண்டும். விதையை எறிய வேண்டும் .இந்த பழங்களில் அதிக மருத்துவக் குணங்கள் நிறைந்துள்ளது. தற்போது பழங்களை அதிகம் சாப்பிடாமல் இரசாயனம் கலந்த குளிர்பானங்களை விரும்பி அருந்துகின்றனர்.
இவை உடலுக்கு பல தீங்குகளை இழைக்கக்கூடியது. அதனால் உடலுக்குத் தேவையான அனைத்து சத்துக்களையும் கொடுக்கும் பழங்களை சாப்பிட்டு வந்தால் நோயின்றி ஆரோக்கியமாக வாழலாம்.
பயன்கள் : இப்பழம் பனை நுங்கு போன்று இருக்கும். ரம்புத்தான் பழங்களின் சர்க்கரை அளவு பழங்களின் சதையின் ஒவ்வொரு 100 கிராமுக்கும் நீர்ச்சத்து – 82.3 கிராம், புரதம் – 0.46 கிராம், கார்போஹைட்ரேட் – 16.02 கிராம், சர்க்கரை – 2.9 கிராம், நார்சத்து – 0.24 கிராம், கால்சியம் – 10.6 மி.கிராம், பாஸ்பரஸ் – 12.9 மி.கிராம், அஸ்கார்பிக் அமிலம் – 30 மி.கிராம் உள்ளது.

Leave a Reply