ரங்கராஜ் பாண்டே

ரங்கராஜ்பாண்டேவின்

ஆரம்ப கால வாழ்க்கை குறித்து தெரியுமா…?

தந்தி டிவியில் வரும் கேள்விக்கென்ன பதில் நிகழ்ச்சி என்றாலே அரசியல்வாதிகளுக்கு உதறல் ஆரம்பித்து விடும்.

அந்த அளவுக்கு அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் ரங்கராஜ் பாண்டே கலந்து கொள்ளும் பிரபலங்களை கிடுக்கிபிடி கேள்விகளால் திணறடித்து விடுவார்.

இவரின் சொந்த ஊரு பீகார்.

ஆனால் இவரது பெற்றோர் சென்னை அருகே உள்ள ஸ்ரீவில்லிபுத்தூரில் குடியேறி விட்டனர்.

அதனால் ரங்கராஜ் பாண்டே பிறந்தது படித்தது எல்லாமே இங்குதான்.

Pandeபள்ளி படிப்பை முடித்ததும் மதுரை காமராஜர் கல்லூரியில் தமிழ் இலக்கியம் படித்தார்.

படிக்கும்போதே 32 பக்க கையெழுத்து பிரதியை ஆரம்பித்தார்.

இவருக்கு தொழில் அதிபர் ஆக வேண்டும் என்பதுதான் ஆசை.

அதனால் படித்து முடித்ததும் கொரியர் கவர் தயாரிக்கும் சிறிய அளவிலான தொழிற்சாலையை ஆரம்பித்தார்.

பின்னர் அதனை நண்பரிடம் கைமார்த்திவிட்டு, சென்னைக்கு வந்து பத்திரிக்கைகளுக்கு விளம்பரம் வாங்கி தரும் ஏஜென்சியை ஆரம்பித்தார்.

இதனையும் வெற்றிகரமாகவே நடத்தி வந்தார்.

பின்னர் தினமலர் பத்திரிகையின் தொடர்பு கிடைக்க அதில் கீழ்நிலை பத்திரிகையாளராக சேர்ந்தார்.

18 ஆண்டுகள் அங்கு பணியாற்றினார். பின்னர் தனது திறமையால், ஒரு கட்டத்தில் தலைமை செய்தி ஆசியராக உயர்ந்தார்.

தினமலரில் இப்போதும் வெளியாகும் டவுட் தனபாலு பகுதி ரங்கராஜ் பாண்டேவின் கற்பனை கதாபாத்திரம் ஆகும்.

அதன்பிறகு தந்தி தொலைக்காட்சி ஆரம்பிக்க அதில் உதவி செய்தி ஆசிரியராக சேர்ந்தார்.

அங்கு சேர்ந்த 6 மாதத்தில் தலைமை செய்தி ஆசிரியராக உயர்ந்தார்.

தற்போது தந்தி டிவியின் முழு நிர்வாக பொறுப்பும் இவரின் கையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply