மூன்றெழுத்து

“அம்மா”.. மூன்றெழுத்து..!!
 “அப்பா”.. மூன்றெழுத்து..!!
 “தம்பி”.. மூன்றெழுத்து..!!
 “தங்கை”.. மூன்றெழுத்து..!!
 “மகன்”.. மூன்றெழுத்து..!!
 “மகள்”.. மூன்றெழுத்து..!!
 “காதலி”.. மூன்றெழுத்து..!!
 “மனைவி”.. மூன்றெழுத்து..!!
 “தாத்தா”.. மூன்றெழுத்து..!!
 “பாட்டி”.. மூன்றெழுத்து..!!
 “பேரன்”..மூன்றெழுத்து..!!
 “பேத்தி”.. மூன்றெழுத்து..!!
இவை அனைத்தும்.. அடங்கிய..
 “உறவு”.. மூன்றெழுத்து..!!
உறவில் மேம்படும்..

 “பாசம்”.. மூன்றெழுத்து..!!
பாசத்தில் விளையும்..

 “அன்பு”.. மூன்றெழுத்து..!!
அன்பில் வழியும்..

 “காதல்”.. மூன்றெழுத்து..!!
காதலில் வரும்..

 “வெற்றி”.. யும்

 மூன்றெழுத்து..!!
 “தோல்வி”..யும்

 மூன்றெழுத்து..!!
 “காதல்” தரும் வலியால் வரும்..

 “வேதனை”.. மூன்றெழுத்து..!!
வேதனையின் உச்சகட்டதால்

 வரும்..

 “சாதல்”.. மூன்றெழுத்து..!!
சாதலில் பறிபோகும்..

 “உயிர்”..மூன்றெழத்து..!!
இது “கவிதை”.. என்றால்..

அதுவும் மூன்றெழுத்து..!
இது

“அருமை”.. என்றால்.. அதுவும்

 மூன்றெழுத்து..!!
 “மொக்கை”.. என்றால்..

அதுவும் மூன்றெழுத்து..!!
கமெண்ட்ஸ் எப்படி வருமோ..

என்ற

“கவலை”.. யும்

 மூன்றெழுத்து..!
 “நட்பு”.. என்ற மூன்றெழுத்தில்

 இணைந்து படித்த..

அனைவருக்கும்

“நன்றி”.. என்பதும்

 மூன்றெழுத்து..!!
 “மூன்று”..உம்

 மூன்றெழுத்தே..!!
இவை அனைத்தும் அடங்கிய..

 “தமிழ்”.. உம் மூன்றெழுத்தே..!!
 “வாழ்க”.. “தமிழ்”…!!

Leave a Reply