முன்னாள் முதல்வர் ஜெ. வாழ்வில் பதிவான கடைசி சம்பவங்களில் சில

வேதா இல்லம்

போயஸ் கார்டனில் உள்ள வேதா நிலையம் தான் இவரது இல்லம். இங்கு கடைசியாக செப். 22ம் தேதி உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதி. டிச. 6ல் இவரது உடல் இறுதியாக வேதா நிலையம் வந்தது.

செயின்ட் ஜார்ஜ் கோட்டை

தமிழக தலைமை செயலகம் செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் உள்ளது. இங்கு கடைசியாக செப்., 21ல், 200 புதிய அரசு பஸ்களை தொடங்கி வைக்கும் விழாவில் பங்கேற்றார்.

சந்தித்த பொதுமக்கள்

கடந்த செப்., 21ல், தலைமை செயலகத்தில் நீலகிரி பெண் தோட்டத் தொழிலாளர்களுக்கு கடனுதவி வழங்கினார். இவர்கள் தான் ஜெ.,வைச் சந்தித்த கடைசி பொதுமக்கள்.

கடைசி மரியாதை

கடந்த செப்., 17ல் பெரியாரின் 138வது பிறந்த நாளுக்கு மலர் துாவிமரியாதை செலுத்தினார். இதுவே இவர் தலைவர்களுக்கு செய்த கடைசி மரியாதை.

கடைசி இரங்கல்

கடந்த நவ., 22ல் மறைந்த கர்நாடக இசைக் கலைஞர் பாலமுரளி கிருஷ்ணாவுக்கு இரங்கல் தெரிவித்து கடைசி அறிக்கை வெளியிட்டார்.

கடைசி கையெழுத்து: திருச்சி, தஞ்சை,
அரவக்குறிச்சி தொகுதி தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்களின் ‘பி–பார்ம்’-ல் அ.தி.மு.க பொதுச் செயலர் என்ற முறையில் ஜெயலலிதா கையெழுத்துப்போட வேண்டும்.

அதில் பெருவிரல் ரேகை வைத்தி ருந்தார். பின் நவ., 22ல் தேர்தல் வெற்றிக்காக ஜெ., வெளி யிட்ட அறிக்கையில் கையெழுத்து இடம் பெற்றிருந்தது.இது அவரது கடைசி கையெழுத்து.

கடைசி நாட்கள்

செப்., 22ல் சிகிச்சைக்காக அப்போலோ மருத்து வமனையில் அனுமதிக்கப்பட்டார். அன்று முதல் உயிர் பிரிந்த டிச. 5 வரை 75 நாட்கள் அப்பல்லோவில் தான் இருந்தார்.

சட்டசபை உரை

ஜெயலலிதாவின் கடைசி சட்டசபை நிகழ்ச்சி யாக, பட்ஜெட் கூட்டத்தொடர் அமைந்தது. ஆக., 1 முதல் செப்., 2 வரை கூட்டத்தொடர் நடந்தது. இதில் அவர் பேசியதே சட்டசபையில் கடைசி பேச்சு.

தேர்தல் பிரசாரம்

சட்டமன்றத் தேர்தலுக்காக(2016), சென்னை யின் புறநகர் பகுதிகளில் மே 14ல் வேன் மூலம் கடைசியாக பிரசாரம் செய்தார்.

சட்டசபை தொகுதி

கடைசியாக ஆர்.கே.நகர் சட்டசபை(2016) தொகுதியில் போட்டியிட்டார்.

dinamalar

Leave a Reply