முதல்வர் மருத்துவ செலவு 90 கோடி

முதல்வர் மருத்துவ செலவு 90 கோடி: அப்போலோ
மக்கள் :  அப்படி 90கோடிக்கி என்ன வைத்தியம் பாத்தீருன்னு எங்களுக்கு கணக்கு வேணும்..
ரெட்டி :  ஓகோ அப்படியா, சரி உக்காருங்க இந்தாங்க கால்குலேட்டர் நான் சொல்ல சொல்ல கூட்டுங்க..
சளி, தலைவலிக்கி ட்ரீட்மென்ட் குடுக்க சாரிடான் மாத்திரை, கோடாலி தைலம் வாங்குனது 6கோடி..
நீர்ச்சத்து குறைபாடுக்காக ட்ரீட்மென்ட் குடுக்க வாட்டர் பாக்கெட் வாங்குன வகையில 5கோடி..
நுரையீரல் தொற்றுநோய் பெசலிஸ்ட்டான வெளிநாட்டு டாக்டரை வர வச்ச செலவு 8கோடி..
அந்த பெசல் டாக்டர் வந்து நுரையீரலை சுத்தம் பன்றதுக்காக டெட்டால், பிளீச்சிங் பவுடர் வாங்குன செலவு ரெண்டு மாசத்துக்கும் சேத்து 15கோடி..
ஆஸ்பத்திரி ரூம் வாடகை 75நாளைக்கும் 21கோடி..
எவ்வளவு வருது?
மக்கள் :  55கோடி..
ரெட்டி :   சிசியூ வார்டுல இருந்து சாதா வார்டுக்கு மாத்துன வார்டுபாய்க்கும், ரூமை கூட்டி பெருக்குன ஆயாவுக்கும் குடுத்த பேட்டா காசு 50லட்சம்..
ரூமுக்கு கரண்டுபில்லு 2கோடி.. ஆஸ்பத்திரி ஜெனரேட்டர் வாடகை 4கோடி..
பாக்க வந்த அரசியல் தலைவருங்களை எல்லாம் கேட்டுலயே மடக்கி திருப்பி அனுப்புன வாட்ச்மேனுக்கு டிப்ஸ் ஒரு 25லட்சம்..
இவங்கனால ஆஸ்பத்திரி வருமானம் பாதிச்சதுக்கு பெனாலிட்டி 10கோடி..
இப்ப எவ்வளவு ஆச்சு?
மக்கள் :  71கோடியே 75லட்சம்..
ரெட்டி :  ம்ம்ம்.. மேடத்தை பாக்க வந்தவங்க, மேடத்தை பாக்காம கேண்டீன்க்கு போயி வச்ச டீ பாக்கி 2கோடியே 25லட்சம்..
கடைசிநாள் வந்த நெஞ்சுவலிக்கு ட்ரீட்மென்டு குடுக்கறதுக்கு பாரசிட்டமால் மாத்திரை பத்து டஜன், ஆக்சன் ஃபைவ் ஹன்ட்ரடு மாத்திரை பத்து டஜன், ஒரு பச்சைக்கலரு மிசினு வெளிநாட்டுல இருந்து இறக்குமதி பண்ணுன செலவு 16கோடி..
இப்ப நீங்க ஆஸ்பத்திரி கம்பவுன்டு உள்ள வந்ததுக்கு என்ட்ரன்ஸ் ஃபீஸ் 20ஆயிரம்..
மொத்தம் எவ்வளவு வருது?
மக்கள் :  90கோடியே 20ஆயிரம்..
ரெட்டி :   சரி நீங்க கட்ட வேண்டிய 20ஆயிரத்தை ரிசப்சன்ல கட்டிட்டு கெளம்புங்க..
மக்கள்  : :oops::oops::oops::oops::oops::oops::oops::oops:
SM

Leave a Reply