மழை என்றாலும், வெயில் என்றாலும் இவர்தான்

சென்னை வானிலை மைய இயக்குநர் ரமணன் சென்ற மார்ச் மாதத்தோடு 31/3/2016 தனது பணியில் இருந்து ஓய்வு பெற்றார். அரசு ஊழியர்கள் யாரும் பெரும்பாலும், ஊடகங்களிலோ அல்லது மக்கள் மத்தியிலோ பிரபலமடைவது இல்லை. ஆனால், அவர்களில் இருந்து விதிவிலக்காக மழை என்றாலும், வெயில் என்றாலும் உடனே மக்களின் நினைவுக்கு வருபவராக பிரபலமானவர் தான் ரமணன். இவரை மாணவர்களின் கடவுள் என்று தான் கூற வேண்டும்.

மழையே பொழியாமல் காய்ந்த பூமியாக  காட்சியளிக்கும் ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்துதான், தமிழகத்தில் எங்கெங்கு மழை பெய்யும் என்று  எதிர்காலத்தில் கணித்துச் சொல்லக் கூடிய  ரமணன் பிறந்தார்.

சென்னையில் படித்து வளர்ந்த ரமணன், விவேகானந்தா கல்லூரியில் பி.எஸ்சி., இயற்பியல் முடித்து, பின்னர் அண்ணா பல்கலையில், எம்.எஸ்சி, படித்து, பின்னர் மத்திய அரசின் பணியாளர் தேர்வு ஆணையம் நடத்திய தேர்வில் தேர்ச்சி பெற்றார். இதனால், இந்திய வானிலை ஆய்வு துறையில், மூத்த உதவியாளராக பணியில் சேர்ந்தார். பின் வேலை பார்த்துக் கொண்டே சென்னை பல்கலையில், பிஎச்.டி., முடித்து டாக்டர் ஆனார். இதன்பின், பல பதவி உயர்வு தேர்வுகளை எழுதி, இயக்குனராக உயர்வு பெற்று, தற்போது பணி நிறைவு பெற்றார்.

வானிலை என்றோலே ரமணன் தான்

ஒருகாலத்தில் ரமணன் இன்று மழை வரும் என்று சொன்னால், கண்டிப்பாக மழை வராது என்று நாம் தயிரியமாக சென்ற மக்களுக்கு, கடந்தாண்டு கொட்டித் தீர்த்த கனமழை வெள்ளத்தோடு, ரமணன் மீதான நம்பிக்கையை இமயம் போல வளர்ந்தது எனலாம்.

தமிழகத்தைப் புரட்டிப் போட்ட பெருமழையின் போது ரமணன் குரல்தான் மூழ்கிய வீடுகளில் முடங்கிக் கிடந்தவர்களுக்கான ஒரே ஆறுதல் குரலாக இருந்தது என்றால் அது மிகையல்ல. அதே போல் மீம்ஸ்களால் அதிகளவு ஆராதிக்கப்பட்ட ஒரு அரசு ஊழியர் ரமணனாகத்தான் இருக்க முடியும்.
மாணவர்களின் பாகுபலி

மழைக்கடவுள் வர்ண பகவானின் தம்பி இந்த ரமணன் என சமூகவலைதளங்களில் மக்கள் கொண்டாடினர். பள்ளி செல்லும் குழந்தைகளின் ஹீரோவாக ரமணன் உயர்ந்தார் என்றுதான் சொல்ல வேண்டும்.

பணியில் ஈடுபாடு

புயல் நேரத்தில் மக்களுக்கு எச்சரிக்கை விடுப்பதற்காக விடுமுறை நாட்களிலும், அலுவலகத்திற்கு வந்து வானிலை பற்றி ஊடகங்கள் வழியாக கூறி, தனது பணியில் உள்ள ஈடுபாட்டையும், மக்கள் நலனில் கொண்ட அக்கறையையும் ரமணன் நிரூபிததுள்ளார் என்று தான் கூற வேண்டும்.

அர்ப்பணிப்புடன் பணிபுரியும் ரமணன்கள், பொறுமையின் சிகரங்கள் ஒவ்வொரு துறைக்கும் காலந்தோறும் தேவை…

ரமணன் விடைபெற்றாலும், ஒவ்வொரு மழைக்கும் ஒலித்த அவரது குரல் என்றும் தமிழக மக்களுடனேயே…!

சினிமா வாய்ப்பு

மக்கள் மத்தியில் பிரபலமான ரமணனுக்கு சினிமா மற்றும் சின்னத்திரை வாய்ப்புகளும் வந்ததாக அவரே சொல்லி இருக்கிறார். ஒருவேளை ஓய்விற்குப் பின்னர் அவரை திரையில் நடிகராக வந்தாலும் ஆச்சரியமில்லை.

Leave a Reply

Your email address will not be published.