மது இல்லாததால் பின் தங்கிய மாநிலம்

கொச்சி: கேரள மாநிலத்தில் அமல்படுத்தப்பட்ட மது கட்டுப்பாட்டால், அம்மாநில சுற்றுலா துறைக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியைச் சேர்ந்த, பினராயி விஜயன் முதல்வராக உள்ளார். மாநிலத்திற்கு சுற்றுலா வரும் வெளிநாட்டு பயணிகளால், அதிக வருமானம் கிடைத்து வந்தது. இந்நிலையில், உம்மன் சாண்டி தலைமையிலான, முந்தைய, காங்., ஆட்சியின் போது, மாநிலத்தில், மது விற்பனையை குறைப்பதற்காக, சில அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.

இதன்படி, நட்சத்திர ஓட்டல்களில் செயல்பட்டு வந்த, ‘பார்’கள் மூடப்பட்டன. இதனால், உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறைந்து விட்டதாகவும், சர்வதேச மாநாடுகள் வேறு மாநிலங்களுக்கு மாற்றப்பட்டு விட்டதாகவும், சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் கூறியுள்ளனர்.

‘மற்ற மாநில சுற்றுலா துறைகளுடன் ஒப்பிட்டால், கேரள சுற்றுலா துறை மிகவும் பின்தங்கி உள்ளது. புதிய அரசு, மதுவிலக்கு கொள்கையில் மாற்றம் செய்தால், சுற்றுலா துறை மேம்படும்’ என, சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.

Leave a Reply