மசினகுடி இயற் இடம்

​எங்கே பார்த்தாலும் மசினகுடி யாரைக்கேட்டாலும் மசினகுடி. இந்த பெயர் இளைஞர்கள் மத்தியில் அப்படி ஒரு டிரெண்ட் ஆகிருக்கு. அப்படின்னா என்னனு கேட்பவர்களுக்கு இந்த கட்டுரை.

சாகசங்களை விரும்புபவர்களா நீங்கள்? அதுவும் காடுகளில் பயணம் செய்வது என்றால் உங்களுக்கு அலாதி பிரியமா? அப்படியென்றால் நீங்கள் செல்லவேண்டிய இடம் இதுதான்.

உண்மையில் இது மாதிரி வேறு இடங்களே இல்லையா அப்படி என்ன பிரமாதம் என்று கேட்கலாம். இதுபோன்று பல இடங்கள் இருப்பினும் இன்று முடிவு செய்து நாளை கிளம்பலாம் என்றால் அது மசினகுடிதான்.
ஆம். தற்போது இளைஞர்கள் அதிகம் பேர் செல்வதும் செல்லவிரும்புவதும் இந்த இடத்துக்குதான். நமக்கு தெரிந்ததெல்லாம் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி. ஆனால் இவ்வளவு அழகான இடத்தை பற்றி நம்மில் எத்தனை பேருக்கு தெரியும். வாங்க அந்த சொர்க்கத்துக்கு உங்களை அழைத்துச் செல்கிறோம்.
மசினகுடி – இயற்கையின் ஒட்டுமொத்த பேரழகு.
ஊட்டியில் இருந்து வெறும் 30 கிமீ தொலைவில் அமைந்துள்ளார் இந்த பேரழகி. ஒரு மணி நேரத்துக்கும் குறைவான நேரமே ஆகிறது. மாநில நெடுஞ்சாலை எண் 700 ஐ தொடர்ந்தால் எளிதில் அடைந்துவிடலாம்.அல்லது பெங்களூருவிலிருந்தும் இந்த இடத்தை அடையலாம்.

ஆபிஸ் எப்பவேணா போய்க்கலாம் மச்சி. சீசன் கிடைக்குமா வா ஒரு வாட்டி போய்ட்டு வந்துடலாம். இப்படித்தான் பலர் தங்கள் நண்பர்களை அலுவலகத்துக்கு விடுப்பு எடுத்துவிட்டு மசினகுடி அழைத்துச் செல்கின்றனர்.அடடே. உங்களுக்கு தொந்தரவுலாம் இல்ல. நீங்க வாரவிடுமுறையில் நினைத்தால்கூட போதும். இங்கே வந்து மகிழ்ந்துவிட்டு செல்லலாம்.

இது ஒரு நீண்ட பயணம். இந்த பயணத்தில் நீங்கள் பெங்களூருவிலிருந்து ஆரம்பிக்கலாம்.பெங்களூருவிலிருந்து பார்க்கும்போது, முதலில் வரும் காடு பந்திப்பூர். இங்கு கோபாலசாமி மலையும் அதனுடன் கோயிலும் அமைந்துள்ளது. இந்த பயணத்தின்போது இங்கு செல்ல மறக்கவேண்டாம்.கோயில் காலை 8 மணி முதல் மாலை 4மணி வரை திறந்திருக்கும்.

இந்த காடுகள் மிகவும் பயங்கரமானவை. நன்கு முன்னெச்சரிக்கையாக இருக்கவேண்டும்.நல்ல காட்சிகளும், விலங்குகளும் இருக்கும். இதைக் கண்டுவிட்டு நம் பயணத்தை தொடர்வோம். முக்கியமாக பந்திப்பூர் காடுகளின் சவாரி பயணத்தை தவறவிடாதீர்கள்.Yathin S Krishnappa

Leave a Reply