மகாத்மா பேரன் மறைவு

மகாத்மா காந்தியின் பேரன் கனுபாய் காந்தி(87) உடல்நலக் குறைவால் இன்று காலமானார்.

மறைந்த கனுபாய் காந்திக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
மகாத்மா காந்தியின் பேரன் கனுபாய் காந்தி. இவர்தான் உப்பு சத்தியாகிரகத்தின்போது காந்தியின் தடியை பிடித்துக்கொண்டு முன்னால் சென்ற சிறுவன். இது வரலாற்றில் பதிவான புகைப்படங்களில் இடம்பெற்றுள்ளது. பின்னர் அமெரிக்கா சென்று படித்தார். அங்கேயே அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசாவில் விஞ்ஞானியாக பணியாற்றினார்.

பாஸ்டன் பயோமெடிக்கல் ஆராய்ச்சி நிறுவனத்தில் பணியாற்றியவரும் டாக்டர் பட்டம் பெற்றவருமான ஷிவலட்சுமியுடன் கானுபாய்க்கு முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய் தலைமையில் திருமணம் நடந்தது.

ஓய்வுக பெற்றதற்கு பின்னர் தன்னுடைய மனைவி சிவலட்சுமியுடன் கடந்த 2014ம் ஆண்டு இந்தியா திரும்பினார்.
இங்கு வந்த பின்னர் இருவரும் ஒரு ஆசிரமத்தில் சேர்ந்தனர். இந்த நிலையில் உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த கனுபாய் காந்தி குஜராத்தில் உள்ள சூரத்தில் சிவ ஜோதி டிரஸ்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதயக்கோளாறு, பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்த அவர், திங்கள்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Leave a Reply