போய் வாருங்கள் அம்மா

ஒரு பத்திரிகையாளனாக கார்ட்டூனிஸ்ட்டாக இதுவரை அவரை ஜெயலலிதா என்றே குறிப்பிட்டு வந்திருக்கிறேன். டாஸ்மாக் உட்பட பல விவகாரங்களில் கடுமையாக விமர்சித்து மோசமாக சித்தரித்து கார்ட்டூன்கள் வரைந்திருக்கிறேன்.
ஆனால் அவர் மீது அரசியல்ரீதியாக எவ்வளவோ விமர்சனமிருந்தாலும் அவரது மறைவு செய்தி அறிந்தபோது மனதிற்கு மிகவும் சங்கடமாக இருந்தது..
குடும்பம் குழந்தை என்று எதுவுமில்லாமல் வாழ்ந்து  தனித்து பயணித்த அவரது இறுதி பயணக் காட்சியைப் பார்த்தபோது..
ஏனோ முதல்முறையாக அவரை “அம்மா..” என்று அழைக்க தோன்றியது..
புதிய உலகிலாவது கணவன் குழந்தைகள்  என்று உண்மையான உறவுகள் சூழ் வாழ்வு அமைந்து உங்கள் மனம் அமைதியடைய எல்லாம் வல்ல இயற்கையை வேண்டுகிறேன்.. 
போய் வாருங்கள் அம்மா.. 
-கார்ட்டூனிஸ்ட் பாலா

7-12-16

Leave a Reply

Your email address will not be published.