பேருந்துப் பயணம் ஏன் அதிகக் களைப்பைத் தருகிறது?

பேருந்து ஓடும்போது அதன் எஞ்சின் அதிர்வுகளும், சாலையில் உள்ள மேடு பள்ளங்களில் ஏறி இறங்கும்போது ஏற்படும் அதிர்வுகளும் நம் உடலில் தாக்கத்தை ஏற்படுத்தி களைப்பை அதிகரிக்கின்றன. சாலையில் பேருந்து செல்லும்போது அதன் வேகம் எல்லா நேரத்திலும் சீராக இருப்பதில்லை. பேருந்தின் வேகம் அடிக்கடி குறைவதாலும், அதிகரிப்பதாலும், வளைவுகளில் திரும்புவதாலும் நம் உடல் முன்னும் பின்னும் பக்கவாட்டிலும் தள்ளப்படுகிறது. தொடர்ந்து ஒரே நிலையில் இருக்க முடியாமல் போவதால் நம் உடல் களைப்படைகிறது.இது மட்டுமல்லாமல், சாலையில் செல்லும் இதர வாகனங்களின் இரைச்சல், அவை வெளியிடும் நச்சுப் புகை ஆகியவையும் சேர்ந்து நம் உடலைப் பெரிதும் களைப்படையச் செய்துவிடுகின்றன. அதே நேரம் ரயில் பயணம் என்றால், அதன் எஞ்சின் அதிர்வதில்லை. தண்டவாளம் சீராக ஒரே மாதிரி இருப்பதால் ஏற்ற இறக்கம் இல்லை. வேகம் சட்டென அதிகரித்து சட்டெனக் குறைவதும் இல்லை. இரைச்சலும் புகையும் குறைவு. ஏனென்றால் தண்டவாளத்தில் ஒரு

Leave a Reply